இலங்கையில் முதியவர்கள் பெண்கள் உட்பட 56 பேர் கைது!

ஏப்ரல் 23, 2019 603

கொழும்பு (23 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக முதியவர்கள் பெண்கள் உட்பட சந்தேகத்தின் பேரில் இதுவரை 56 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இலங்கையில் நேற்று முன் தினம் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து ,நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் வெள்ளவத்தை, தம்புள்ளை, வெல்லம்பிட்டிய, ஹன்சியாஹேன, கம்பளை, கட்டுகஸ்தோட்டை, வத்தளை – எந்தரமுல்ல ஆகிய பகுதிகளில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியான இன்சான் சீலவன் என்பவரின் தொழிற்சாலையில் பணிபுரிந்த 9 பேரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் மே மாதம் 6ஆம் தேதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து நடத்தப் பட்ட தேடுதல் வேட்டையில் பெண்கள் முதியவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நாட்டில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...