இலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவர் கைது!

ஏப்ரல் 24, 2019 762

கொழும்பு (24 ஏப் 2019): இலங்கையில் பள்ளிவாசல் இமாம் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் நடத்தப் பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து அங்கு இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நூற்றுக் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த கொடிய சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை அரசு அதிரடியாக பலரை கைது செய்து வருகின்றது. இந்நிலையில் ஹெம்மாதகம பள்ளிவாசல் இமாம் உட்பட இருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...