ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றம் சாட்டக் கூடாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா!

ஏப்ரல் 26, 2019 498

கொழும்பு (26 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்கக் கூடாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மத பிரிவினைவாதத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்புள்ளதென குறிப்பிட்ட ஜனாதிபதி, போதைப்பொருள் வர்த்தகம் மூலம் புலிகளுக்கும் பெருந்தொகை பணம் கிடைத்ததென சுட்டிக்காட்டினார்.

மேலும், ஒருசிலரின் செயற்பாடுகளுக்காக அனைத்து முஸ்லிம்களையும் தவறாக நினைக்கக் கூடாதென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அத்தோடு, முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென மக்களை கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக இவ்விவகாரத்தை அரசியல் விவகாரமாக அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தாமல், சர்வதேச தீவிரவாதத்தின் தாக்கத்தை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...