மதரஸாக்களில் பாதுகாப்புப் படையினர் சோதனை!

ஏப்ரல் 28, 2019 446

கொழும்பு (28 ஏப் 2019): இலங்கையில் உள்ள மதரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய கல்விக் கூடங்களில் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று இலங்கையில் நடத்தப் பட்ட பயங்கரவாத குண்டு தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் தேடுதல் வேட்டைகள் நடத்தப் பட்டு வருகின்றன.

அந்த வகையில் அதிபர் சிறிசேனா உத்தரவின் பேரில் கிழக்கு மாகானத்தில் உள்ள மதரஸாக்கள் மற்றும் கல்விக் கூடங்களில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கல்விக் கூடங்களின் ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப் பட்டது..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...