இலங்கை காத்தான்குடியில் ஐந்து இந்தியர்கள் கைது!

மே 01, 2019 695

கொழும்பு (01 மே 2019): இலங்கை காத்தான்குடியில் ஐந்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 21ஆம் தேதி நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியும், சங்கரிலா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவருமான சஹ்ரான் ஹாஷிம் என்பவரின் சொந்த ஊர் காத்தான்குடி,

இந்நிலையில் முஹீதீன் பள்ளிவாசல் கட்டட நிர்மாண வேலைக்காக இவர்கள் வந்திருந்ததாக, கைது செய்யப்பட்டோர் தரப்பில் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர், காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு போலீஸார் இணைந்து இன்று காத்தான்குடியிலுள்ள வீடுகளிலும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்குவதற்கு போலீஸார் மறுத்து விட்டனர். ஆனால் அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை என கூறப்படுகிறது. இதனாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...