இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல் - ஒருவர் பலி!

மே 14, 2019 531

கொழும்பு (14 மே 2019): இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் சர்ச் மற்றும் இன்னும் சில இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அது முதற்கொண்டு இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே ஃபேஸ்புக் பதிவு ஒன்று முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை அதிகப் படுத்தியுள்ளது. மேலும் பள்ளி வாசல்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே கலவரக் காரர்களின் தக்குதலில் 42 வயது முஹம்மது அமீர் முஹம்மது என்பவர் கொல்லப் பட்டுள்ளார். மிகுந்த காயங்களுடன் அமீர் முஹம்மது மாரவில்லா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனால் மேலும் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இதற்கிடையே இதையடுத்து ஃபேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலை தளங்களுக்கு இலங்கை அரசு தற்காலிக தடை விதித்திருக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...