இலங்கையிலிருந்து படகு வழியே வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது - வீடியோ!

மே 15, 2019 644

கொழும்பு (14 மே 2019): இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் சவுக்கடி பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்றவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த மே12ம் தேதி காலை படகு வழியாக வெளியேற முயன்றவர்கள் குறித்து மீனவர்கள் சந்தேகம் அடைந்த நிலையில், இவர்களுடன் 15க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமான முறையில் படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றுள்ளனர். காவல்துறையின் கையில் சிக்காமல் தப்பிய 15க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக மட்டகளப்பு காவல்துறை தெரிவித்திருக்கின்றது.

இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், வரும் காலங்களில் படகு வழியாக மேலும் பலர் வெளியேறக்கூடும் எனக் கூறப்படுகின்றது. கடந்த 2009ம் ஆண்டு போர் முடிவுக்குப் பின், ஆஸ்திரேலியாவை நோக்கி பெருமளவில் ஈழத்தமிழர்கள் தஞ்சக்கோரிக்கை பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை எந்தவித பரிசீலனையுமின்றி முழுமையாக நிராகரித்து வருகின்றது.

இந்த காலக்கட்டத்தில், ஆஸ்திரேலியாவின் தலையீட்டின் மூலம் ஆட்கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 614 பேர் கைதாகியுள்ளனர். இதில் முதன்மையாக இலங்கையில் 489 கைதுகளும், இந்தோனேசியாவில் 66 கைதுகளும், மலேசியாவில் 48 கைதுகளும் நடந்துள்ளன. இந்தியாவிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...