இலங்கையில் மவுலவி உட்பட ஐந்து பேர் கைது!

மே 15, 2019 715

கொழும்பு (14 மே 2019): தற்கொலை குண்டுதாரிக்காக பிரார்த்தனை நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் மௌலவி உட்பட ஐவர் (செவ்வாய்க்கிழமை) மாலை அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுபிட்டியில் உள்ள முஹம்மது இப்ராஹீம் அன்ஷாப் அஹமதின் மனைவியின் வீட்டில் வைத்து அவர்களைக் கைது செய்ததாக கொள்ளுப்பிட்டி போலிஸார் கூறினர்.

கொழும்பு சினமன் கிரான்ட் விடுதியில், தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் முஹம்மது இப்ராஹீம் அன்ஷாப் அஹமதுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மெளலவி உட்பட்ட ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த மெளலவி ஒருவரும் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த மேலும் நால்வரையும் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து முச்சக்கர வண்டியொன்றையும் வீட்டில் இருந்த ட்ரோனர் கமெரா ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...