எங்களுக்கு ஏன் இந்த தண்டனை? - கதறும் இலங்கை முஸ்லிம்கள்!

மே 16, 2019 466

கொழும்பு (16 மே 2019): யாரோ சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்த தவறுக்கு எங்களை ஏன் கொடுமை படுத்துகிறீர்கள் என்று இலங்கை முஸ்லிம்கள் கதறுகின்றனர்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற இனவன்முறைகளில் அதிக பாதிப்புகளைச் சந்தித்த பகுதிகளில் ஒன்று மினுவாங்கொட. இங்கு முஸ்லிம் மக்களின் கடைகள், வீடுகள், பள்ளிவாசல்கள் பல அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு கலவர பூமியாக காட்சியளிக்கின்றது.

இங்கு முஸ்லிம்களின் வியாபார ஸ்தாபனங்கள் பல சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. உடைந்த சுவர்களும் எரிந்த தூண்களும் புகைபடிந்த கட்டடங்களும் என நகர் தற்போது காட்சியளிக்கின்றன.

அங்குள்ள மக்கள், யாரோ செய்த தவறுக்கு ஏன் தம்மை பழிவாங்குகிறார்கள் என ஆதங்கமும் கவலையும் விரக்தியும் கலந்த தொனியில் பேசுகின்றனர்.

நகரில் தற்போது பெருமளவான படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலலப்படுத்தப்பட்டுள்ளதோடு, இராணுவ வாகனங்கள் நகரில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதுவரை எவ்வித பாகுபாடும் இன்றி வாழ்ந்த தாம் இனியும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே இம்மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...