முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!

மே 17, 2019 446

கொழும்பு (17 மே 2019): இலங்கையில் முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தது.

இதனிடையே, ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று சில வாரங்கள் கடந்த நிலையில், முஸ்லிம் மக்கள் மீது வடமேல் மாகாணம் உட்பட்ட சில பகுதிகளில் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து பேருவளை, மரதான மஸ்ஜிதுல் அப்ரார் ஜூம்மா பள்ளயில் இன்று இடம்பெற்ற ஜூம்மா தொழுககைக்குப் பின்னர் மக்கள் முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...