இலங்கையில் FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புகள் விசாரணை!

மே 23, 2019 285

கொழும்பு (23 மே 2019): இலங்கை குண்டு வெடிப்பு விசாரணையில் FBI உள்ளிட்ட 9 சர்வதேச அமைப்புக்களின் குழு ஈடுபட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த குழுக்கள் இலங்கையில் இருந்தவாறே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு இலங்கை விசாரணையாளர்களுடன் களத்தில் உள்ள வெளிநாட்டு விசாரணை நிறுவனங்களில் எப்.பி.ஐ., ஸ்கொட்லன்ட் யார்ட், ஆஸ்திரேலிய பெடரல் போலிஸ் மற்றும் நியூஸிலாந்து ஆகிய சிறப்பு விசாரணையாளர்கள் இணைந்து செயற்படுவதாக போலீஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலிஸாருடன் இலங்கை மிக நெருக்கமாக செயற்படுவதாகவும், பயங்கரவாதிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த தகவல்களை பறிமாற இன்டர்போலுடன் இணைந்து 24 மணி நேர நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...