விமானத்தில் திருகுர்ஆன் ஓதியவரை தடுத்தி நிறுத்தி விசாரணை!

மே 26, 2019 1745

கொழும்பு (26 மே 2019): ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திருகுர்ஆன் ஓதியவரை சிஐடி போலீசார் தடுத்தி நிறுத்தி பல மணிநேரங்கள் விசாரணை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடத்தப் பட்ட தொடர் குண்டு வெடிப்புகளை தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பல இடங்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப் பட்டன.

இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் மேற்கொண்ட முஸ்லிம் ஒருவர் திருகுர்ஆன் ஓதியதாகவும் அவரை சந்தேகத்தின் பேரில் கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிஐடி போலீசார் பல மணிநேரங்கள் விசாரணை மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் இலங்கையில் பல இடங்களில் தேடுதல் வேட்டையில் பலர் கைது செய்யப் பட்டு வருகின்றனர். எனினும் சில அப்பாவிகளும் இதில் கைது செய்யப் படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் வழிபாடு செய்பவர்களை தொல்லை செய்வது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் இலங்கை அப்பவி முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் திருகுர்ஆன் ஓதியவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...