ஐ.நா முன்பு இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!

மே 29, 2019 451

ஜெனிவா (28 மே 2019): ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைய குழு முன்பு இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப் பட்ட பயங்கரவாத செயலை கண்டித்தும், இலங்கை முஸ்லிம்கள் மீது குறிவைத்து நடத்தப் படும் தாக்குதலை கண்டித்தும் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைய குழு முன்பு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கப் படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளை கைது செய்யப் பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு வசனங்கள் அடங்கிய பதாகைகளை முஸ்லிம்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...