இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம் - முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகல்!

ஜூன் 04, 2019 567

கொழும்பு (04 ஜூன் 2019): இலங்கை அரசியலில் அதிரடி திருப்பமாக 9 முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட 9 முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது அமைச்சரவை பொறுப்புக்களில் இருந்து வெளியேறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக ரவூப் ஹக்கீம் கூறினார். இருப்பினும் நாடாளுமன்றத்தில் பின்வரிசையில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தவகையில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம் மற்றும் எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹீர் மௌலானா, பைசல் காசீம், அமீர் அலி ஆகிய இராஜாங்க அமைச்சர்களும் பிரதியமைச்சரான அப்துல்லா மஹ்ரூப்பும் ராஜினாமா செய்தவர்களில் அடங்குகின்றனர்.

மேலும் முஸ்லிம் உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு மாதத்துக்குள் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...