வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை!

ஜூன் 04, 2019 619

கொழும்பு (04 ஜூன் 2019): இலங்கை வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை அமைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட 9 முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது அமைச்சரவை பொறுப்புக்களில் இருந்து வெளியேறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக ரவூப் ஹக்கீம் கூறினார்.

இந்நிலையில் முஸ்லிம் பிரதிநிதிகள் யுத்தகாலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவை உருவாகியுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே முஸ்லிம் அமைச்சர்கள் விரைவில் மீண்டும் பதவி ஏற்பார்கள் என்று மற்றொரு அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...