இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐந்து பேர் துபாயில் கைது!

ஜூன் 14, 2019 746

கொழும்பு (14 ஜூன் 2019): இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகப்படும் ஐந்து பேர் துபாயில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று அடுத்தடுத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல்களில் 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

உலகையே அதிர்ச்சி அடைய செய்த இச்சம்பவத்தில் தொடர்பாக இலங்கையில் பலர் கைது செய்யப் பட்ட நிலையில், முஹம்மது மில்ஹான் உள்பட சிலர் தேடப்படும் சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முஹம்மது மில்ஹான் உள்பட தேடப்படும் 5 பேரை இலங்கை போலீசார் துபாயில் கைது செய்து, இன்று காலை கொழும்புவுக்கு அழைத்து வந்ததாக இலங்கை காவல்துறை செய்தி தொடர்பாளர் ருவன் குணசேகரா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...