இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம் தலைவர்கள் பங்கேற்பு!

செப்டம்பர் 13, 2019 651

கொழும்பு (13 செப் 2019): இலங்கை, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

கொழும்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், கேரளா மாநில மலப்புரம் மாவட்ட தலைவர் சாதிக் அலி தங்கள், மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர், மாநில பொருளாளர் ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், கேரளா மாநில பொதுச் செயலாளர் அப்துல் மஜீத், நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது பஷீர், நவாஸ்கனி, மாநில செயலாளர்கள் காயல் மகபூப், ஆடுதுறை ஷாஜஹான், மில்லத் இஸ்மாயில், நிஜாமுதீன், வக்ஃப் வாரிய உறுப்பினர் பாத்திமா முசப்பர், மாநில துணை செயலாளர் இப்ராகிம் மக்கி, இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பைசல், முசப்பர், மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது, காயல் சாலிஹ், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற துணைத் தலைவர் கவிஞர் கனிமொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், குனங்குடி ஹனிபா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொருளாளர் முகம்மது யூசுப், துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.

இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி மைத்ரி பால சிரிசேன, பிரதமர் ரனில் விக்ரம சிங்க மற்றும் இலங்கை அமைச்சர்கள், பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...