காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு!

செப்டம்பர் 15, 2019 290

கொழும்பு (15 செப் 2019): இலங்கை பிரதமர் ரணில் விகரமசிங்கவுடன் தி.மு.க எம்பி கனிமொழி உட்பட தமிழகத்தின் முக்கியஅரசில் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

(வெள்ளிக்கிழமை) காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கேரள அமைச்சர் அப்துல் மஜீத், தமிழக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், பாத்திமா முஸஃப்பர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மமக தலைவருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், சட்டமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்களுடன் இலங்கை – இந்திய, மீனவர் நெருக்கடி பற்றி இந்திய நாடாளுமன்ற குழுவினருக்கும், இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்றிருந்தது.

இந்த பேச்சுவார்த்தையில், இலங்கை சார்பில் கடல் தொழில் அமைச்சர் திலிப் வெத ஆராச்சி, ஆரம்ப கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...