இலங்கையில் பெய்து வரும் மழையால் பெரும் சேத அபாயம்!

செப்டம்பர் 25, 2019 298

கொழும்பு (25 செப் 2019): இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து 8 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மழையினால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர்..

காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணத்தில் 6730 குடும்பங்களைச்;; சேர்ந்த 25006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில் 14,077 குடும்பங்களைச் சேர்ந்த 54,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலியில் ஒரு வீட்டில் மீது மண் சரிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காலி மாவட்டத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 30 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 819 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. மழை தொடரும் பட்சத்தில் மேலும் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...