இலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு - வாக்காளர்கள் வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு!

நவம்பர் 16, 2019 192

கொழும்பு (16 நவ 2019): இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர்கள் சென்ற வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையின் எட்டாவது அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 35 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அதிபர் தேர்தல் நடைபெறுவதால் அதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுவிடக்கூடாது என்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் மன்னார் பகுதியில் வாக்காளர்கள் சென்ற இரு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். ஆனால் இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்து சேதமடைந்துள்ளது என இலங்கை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...