இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

நவம்பர் 16, 2019 234

கொழும்பு (16 நவ 2019): இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை முடிவுற்ற நிலையில் மாலை 5.15 அளவில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

இலங்கையில் அதிபருக்கான தேர்தல் இன்று (16 நவம்பர்) நடைபெற்றது. இதில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரமதாஸாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிlலையில் வாக்கு எண்ணும் பணிகள் இன்று மாலை 5.15 அளவில் ஆரம்பமாகியது. கொழும்பு மாவட்டத்திற்கான அஞ்சல் மூல வாக்கு எண்ணும் பணிகள் கொழும்பு ரோயல் கல்லூரியிலும், கம்பஹா மாவட்ட அஞ்சல் மூல வாக்கு எண்ணும் பணிகள் வெயாங்கொடை வித்தியாலோக வித்தியாலத்திலும் இடம்பெறுகின்றன.

மேலும் தேர்தல் முடிவுகள் நாளை மாலைக்குள் தெரிந்துவிடும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...