இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்!

நவம்பர் 17, 2019 386

கொழும்பு (17 நவ 2019): இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் உள்ளார்.

இலங்கையில் அதிபருக்கான தேர்தல் நேற்று (16 நவம்பர்) நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் நேற்று மாலை 5.15 அளவில் ஆரம்பமாகியது.

இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச-வுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா-வுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கிய நிலையில், தமிழர்கள் பகுதியில் சஜித் பிரேமதாசா அதிக ஓட்டுகளை பெற்றிருந்தார். அதேபோல, சிங்களவர்கள் பகுதியில் கோத்தபய அதிக ஓட்டுகளை பெற்றிருந்தார்.

யார் வெற்றி என்று தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...