பொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்!

நவம்பர் 19, 2019 216

கொழும்பு (19 நவ 2019): இலங்கை தமிழர்கள் மீது உண்மையில் அக்கரை இருக்குமெனில் பொறுப்புடன் செயல்படுங்கள் என்று நிர்மல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரரான கோத்தபயா ராஜபக்சே, 70, வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இவரின் வெற்றிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் எதிர் கருத்தை பதிவிட்டனர்.

இந்நிலையில், முன்னாள் அதிபர் ராஜபக்சே மகனும் எம்.பி.,யுமான நாமல் ரஜபக்சே தமிழக தலைவர்களின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர வெளியிட்டுள்ள அறிக்கையில். "தமிழக அரசியல் தலைவர்கள், சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். அதில் சிலர் சுயநலத்துடன் சந்தர்ப்பவாத அறிக்கைகளை விடுகின்றனர். அவர்கள், எம் மக்களுக்காக அரசியலை தவிர வேறென்ன ஆக்கபூர்வமான விஷயத்தை செய்திருக்கிறார்கள்?. உண்மையான அக்கரை இருப்பின் ஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...