இலங்கை தமிழர்களுக்கு பேரிழப்பு – ஆறுமுகன் தொண்டமான் மரணம்!

கொழும்பு (26 மே 2020): இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் (55) இன்று காலமானார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆறுமுகன் தொண்டமான். 1990ல் இருந்து இவர் அந்த கட்சியில் இருக்கிறார். அந்நாட்டு தொழிற்சங்கத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக முன்னேற்ற அமைச்சராகவும் அவர் இருந்தார்.

இந்நிலையில் வீட்டில் மயங்கி விழுந்த ஆறுமுகன் தொண்டமானை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இவரின் உடல் பிரிந்துள்ளது.

ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தகக்து.

ஹாட் நியூஸ்: