இனி விசா வழங்கப்பட மாட்டாது – அமெரிக்க அதிபர் திடீர் உத்தரவு!

1100

வாஷிங்டன் (12 ஏப் 2020): அமெரிக்காவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டினரை உடனடியாக அழைத்துக் கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

விசா தடைகள் தொடர்பாக டிசம்பர் 31 வரை நடைமுறையிலுள்ள வகையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ள டிரம்ப், தங்கள் குடிமக்களைத் திரும்ப அழைக்க மறுத்தாலோ அல்லது காரணமின்றித் தாமதித்தாலோ அந்த நாடுகள், அமெரிக்காவுக்குப் பெரும் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் எனக் குறிப்பிட்டுள்ளா்.

மேலும் அமெரிக்காவிலுள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள மறுக்கும் நாடுகளின் மக்களுக்கு இனி விசா வழங்குவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் பேசிய டிரம்ப், அமெரிக்க சட்டங்களை மீறித் தங்கியுள்ள வெளிநாட்டவர்களைத் திறம்பட வெளியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.