அதிபர் ட்ரம்ப், அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் இடையே தரை லோக்கலில் நடந்த காரசார விவாதம்!

Share this News:

நியூயார்க் (30 செப் 2020): அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் இடையே தரை லோக்கலில் காரசாரமாக விவாதம் நடைபெற்றுள்ளது

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், ரிபப்ளிகன் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டெமாக்ட்ரடிக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

அமெரிக்காவில் தேர்தலுக்கு முன் அதிபர் வேட்பாளர்கள் நேரடியாக விவாதம் செய்வது மரபு. இந்த வகையில் ட்ரம்ப், பைடன் இடையேயான அதிபர் தேர்தல் விவாதம் நேற்று தொடங்கியது. வழக்கமாக, இரு வேட்பாளர்களும் கைகுலுக்கி விவாதத்தை தொடங்குவது மரபு. ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக கைகுலுக்காமல் விவாதம் தொடங்கியது. இதில் ஒருவரை ஒருவர் மிகக் கடுமையாக சாடினர்.

பெர்சனாலிட்டி, தனிப்பட்ட வரலாறு, திட்டங்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தை கூட விட்டுவைக்காமல் இருவரும் ஒருவரை ஒருவர் குழாயடி சண்டை ரேஞ்சுக்கு தாக்கி பேசினர். பைடன் பேசியபோது, “ட்ரம்ப் பேசுவது எல்லாமே பொய்தான். அவர் என்ன பொய் பேசுகிறார் என்பதை சொல்ல நான் இங்கு வரவில்லை. ஏனென்றால் அவர் மாபெரும் பொய்யர் என்று அனைவருக்குமே தெரியும்.

கொரோனா எவ்வளவு கொடியது என்று பிப்ரவரி மாதமே தெரிந்தபிறகும் மக்களிடம் ட்ரம்ப் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே பலரும் பலியாகி வருகின்றனர். இனியும் ட்ரம்ப் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாவிட்டால் ஏராளமானோர் பலியாகிவிடுவார்கள்” என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த ட்ரம்ப், “புத்திசாலித்தனத்தை பற்றி நீங்கள் பேசுகிறீர்களா? டெலாவேர் மாகாணத்தில் படித்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நீங்கள் படித்த கல்லூரி பெயரை கூட மறந்துவிட்டீர்கள். புத்திசாலித்தனத்தை பற்றி என்னிடம் பேச வேண்டாம். 47 ஆண்டுகளாக நீங்கள் எதையுமே செய்யவில்லை” என்று கூறினார்.


Share this News:

Leave a Reply