டொனால்ட் டரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்!

வாஷிங்டன் (28 ஜூலை 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு குடும்ப நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்பு ஓ’பிரையன் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். மேலும் அவர் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வீட்டில் இருந்தபடியே கவனித்து வருகிறார்.

ஓ’பிரையன் சமீபத்தில் ஐரோப்பாவிலிருந்து திரும்பினார், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் அதிகாரிகளை அவர் சதித்துப் பேசியுள்ளார். இந்த பயணத்தின்போது, வெளியிடப்பட்ட பல புகைப் படங்கள், ஓ’பிரையன் சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்பதையும், முகக்கவசம் அணியவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளை மாளிகையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஹாட் நியூஸ்:

மான்டோஸ் புயல் இன்று மாலைக்குள் கரையை கடக்கலாம்!

சென்னை (07 டிச 2022): வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது இன்று மாலைக்குள் புயலாக மாறி, நாளை காலை தமிழக - ஆந்திரா...

நவீன தொழில்நுட்பத்தில் கலக்கும் கத்தார்!

கத்தார் (06 டிசம்பர் 2022): தோஹாவில் நடைபெற்றுவரும் உலகக் கால்பந்து போட்டியில், விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, கால்பந்துக்குள் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. FIFA World Cup Qatar 2022...

பட்டையைக் கிளப்பும் அஜீத்தின் துணிவு சில்லா சில்லா பாடல் – வீடியோ!

அஜீத் நடிக்கும் துணிவு படத்தின் முதல் பாடல், "சில்லா சில்லா" இன்று வெளியாகியுள்ளது. வினோத் இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்துள்ளார். சில்லா சில்லா பாடலை அனிருத் பாடியுள்ளார். வெளியாகி சில...