வழிபாட்டுத்தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் – ஆளுநர்களுக்கு அமெரிக்க அதிபர் உத்தரவு!

Share this News:

வாஷிங்டன் (23 மே 2020): அமெரிக்காவில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் உடனடியாக திறக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆளுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. இதன்  பரவலை தடுக்கும் விதமாக அமெரிக்காவில் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன.

அதேவேளை அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “அமெரிக்காவில் தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் மசூதிகளை உடனடியாக திறக்க ஆளுநர்கள் உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அதனை நான் மீற நேரிடும். இதனை உடனடியாக செய்ய வேண்டும்.” என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சில பகுதிகளில் சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன் தேவாலயங்கள் செயல்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Share this News: