ஜான்சன் அண்ட் ஜான்சன் கோவிட் தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைக்க உத்தரவு!

838

நியூயார்க் (13 ஏப் 2021): அமெரிக்காவில் ரத்த உறைவு ஏற்படுவதாக வந்த தகவலை அடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒற்றை-டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுகாதார நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளன.

அமெரிக்காவில் ஆறு பேருக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்ற பிறகு இரத்த உறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது இதனை அடுத்து அதனை நிறுத்தி வைக்க அமெரிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் ஏறக்குறைய ஏழு மில்லியன் மக்கள் இதுவரை ஜான்சன் அண்ட் ஜான்சன் கோவிட் தடுப்பூசி பெற்றுள்ளனர். மேலும் சுமார் ஒன்பது மில்லியன் டோஸ் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.