கட்டுக்குள் வந்த கொராணா – கட்டுப்பாடுகளை நீக்கிய நாடு எது தெரியுமா?

Share this News:

டோக்கியோ (29 செப் 2021): ஜப்பானில் கோவிட் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதோடு பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதால், அங்கு கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன.

ஜப்பானில் கோவிட் பாதிப்பையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், ஜப்பானில் தற்போது பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது; கோவிட் பாதிப்பும் வெகுவாகக் குறைந்துள்ளது.

இதையடுத்து, ஜப்பான் பிரதமர் யோஷிதே சுகா, ‘ஜப்பானில் கோவிட் பரவல் குறைந்துள்ளது. இதனால், கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்படுகின்றன.

கோவிட் பெருந்தொற்றால் பாதித்த பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன.

இதன் மூலம் சமூக பொருளாதார நடவடிக்கைகள் வழக்கமான நிலையை வந்தடையும்’ என, தெரிவித்து உள்ளார்.


Share this News:

Leave a Reply