கொரோனா பூஸ்டர் தடுப்பூசிக்கு தடை!

Share this News:

ஜெனிவா (05 ஆக 2021): கொரோனா  வைரஸ் பூஸ்டர் தடுப்பூசி இடுவதை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார அமைப்பு  கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் விடுத்துள்ள கோரிக்கையில், ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவது, கோவிட் பரவலைத் தடுப்பதில் பயன் தருமா என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

மேலும்  ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய பணக்கார நாடுகள் உதவ வேண்டும்.

மேலும் ஏழை நாடுகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி 10 சதவீதத்தினருக்காவது கிடைப்பதை உறுதி செய்ய உதவும் வகையில், பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply