ஒரே வாரத்தில் இரட்டிப்பான கொரோனா உயிரிழப்பு – உலக சுகாதார அமைப்பு கவலை!

473

ஜெனீவா (02 ஏப் 2020): கொரோனா உயிரிழப்பு ஒரே வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் , தற்போது உலகம் முழுவதையும் விழிபிதுங்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 935,840-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,241 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 194,286 மீண்டுள்ளனர்.

இதற்கிடையில் கொரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் கடந்த ஒரே வாரத்தில் இரட்டிப்பானது பெரும் கவலை தருவதாக சர்வதேச சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதோனம் கெப்ரிசிஸ், கொரோனா ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அடுத்த ஒருவாரத்தில் உலகளவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு 10 லட்சத்தை தொடும். உயிரிழப்புகளும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.” என்று அவர் தெரிவித்தார்.