சிறுநீரகம் பற்றி அறிவோம்..!

Share this News:

மருத்துவர்கள் நாட்பட்ட சிறுநீரக ரோகத்தை ரோகிகளுக்கு விளக்குவதற்காக பயன்படுத்தும் ஒரு சொல்லாடல், “உங்களுக்கு இரத்தத்தில் உப்பு இருக்கிறது அதனால் உணவில் உப்பை அதிகமாக சாப்பிடாதீர்கள்” என்று கூறுவது.

இது ஒரு தவறான அறிவுரை உப்பை குறைத்து சாப்பிடுங்கள் என்றால், உடனே ரத்தத்தில் உள்ள உப்பு, நாம் உணவில் உள்ள உப்பை குறைத்து விட்டால் குறைந்து விடும் என்ற தவறான புரிதலுக்கு வழிவகுக்கிறது.

கழிவுகளை வெளியேற்றாத சிறுநீரகத்தின் பாரத்தை குறைக்கவே உப்பை குறைக்க கூறுகிறார்கள்.

சிறுநீரக வியாதியின் அறிகுறிகள் என்ன?

ஆரம்ப நிலைகளில் அறிகுறிகள் இல்லை, முற்றிய நிலையிலேயே அறிகுறிகள் தோன்றும். அதனாலேயே உடலின் உள்ளே நிகழும் மாற்றங்களை கண்டறியும் யுக்திகள் தேவை. முறையே இவை சிறுநீரக வேலைகள் சரிவர நடக்கின்றனவா என்று கண்டுகொள்ள உதவும் பரிசோதனைகளாம். இது அறிவியல் மருத்துவத்தின் அபரிதமான வளர்ச்சி என்பதற்கு சான்று.

நான்கு வகையான அடிப்படை பரிசோதனைகள் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தை அளக்க முடியும்.
1. GFR
2. Ultrasound of the kidneys.
3. Urine examination.
4. Kidney biopsy.

இங்கே creatinine என்ற கழிவு குறிக்கப்படவில்லை என்பதை கவனியுங்கள். Creatinine என்பது மாமிசத்தில் உள்ள ஒரு பொருளாகும். இதன் உற்பத்தி வயது, மாமிசத்தின் அடர்த்தி, இனம், பால், உட்கொள்ளும் மருந்துகள் என பல காரணிகளால் வேறுபடும். 1300 மேற்பட்ட கழிவுகள் ( உப்புகள்) உற்பத்தியாகின்றன உடலில் அன்றாடம். சிறுநீரகம் நோயுற்றால் இவை தேங்கிவிடும். அதில் ஒன்றுதான் creatinine. எளிதாக அளக்கக்கூடியது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
Creatinine அளவைக்கொண்டு GFR கணிக்கப்படுகிறது.
GFR ஐக்கொண்டு, இரத்தம்சுத்தமாகிற நிலை கணிக்கப்படுகிறது. ஒரு நிமிடத்தில் எவ்வளவு இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது சிறுநீரகத்தால் என்ற அளவையே GFR.

Dr. Venkatesh Natarajan. Nephrologist

தொடரும்..


Share this News: