தூத்துக்குடி தந்தை – மகன் கொலையும் காவல்துறையின் தகிடுதத்தங்களும்!

Share this News:

தூத்துக்குடி தந்தை – மகன் கொலையில் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

“காவலர்களை திட்டிவிட்டு தந்தை, மகன் (பென்னீஸும், ஜெபராஜூம்) தரையில் உருண்டு புரண்டு ஆர்பாட்டம் செய்தனர். அதில் அவர்களுக்கு ஊமைக்காயங்கள் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டக்காரர்கள் மீது அரசு அதிகாரத்தின் மூலம் பெரும் இனப்படுகொலை நடந்தது யாரும் எளிதில் மறந்துயிருக்க மாட்டோம், அப்போது காவல்துறை அறிக்கைக்கு முன்பே தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சமூக விரோதி ஊடுருவியதால் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சுட்டார்கள் என்ற அறிக்கையை ஊடகத்தின் முன் சொன்னார், அது பெரும் சர்ச்சையாக மாறியது. இது அனைவரும் அறிந்தது,

அதே போன்றுதான் இன்று சாத்தான்குளம் காவல்துறை அறிக்கை இருக்கிறது ,
எப்படி பொய்யை மிக சர்வ சாதாரணமாக காவல்துறை பதிவு செய்கிறது என்ற கேள்வி காவல்துறைக்கு எதிராக பெரும் கண்டனங்களாக இணையங்களில் பலராலும் பதிவு செய்யப்படுகிறது.

காவல்துறைக்கு இந்த துணிச்சல் எங்கிருந்து வருகிறது என்றால், ஆளும் வர்க்கம் என்றுமே அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை செயல்களுக்கு துணை நிற்கும், என்பதிலிருந்து தான்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை குடிசைகளை கொழுத்திவிட்டு மாணவர்கள் மீது பழியை போட்டது. ஆளும் வர்க்கம் துணை நின்றது.

திருப்பூரில் சாராயக்கடை அடைப்பு போராட்டத்தில் பெண்களை நடுரோட்டில் வைத்து அறைந்த காவல் அதிகாரிக்கு பணி உயர்வு கொடுத்து ஆளும் வர்க்கம் நன்றி செலுத்தியது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் இதே தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற காவல்துறை, ஆட்சியர் அலுவலகத்தில் தீ வைத்தார்கள் என்று போராட்டக்காரர்கள் மீதே பழியை போட்டது. ஆளும் அரசு துணை நின்றது.

ஆளும் வர்க்கம் துணை நிற்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் அதிகாரவர்க்கம் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து செய்யும். வாய்மூடி காத்திருங்கள்.

அன்பன் ரஹ்மான்.


Share this News: