டெல்லி காவல்துறைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மிரட்டல்!

புதுடெல்லி (19 ஏப் 2022): விஎச்பி, பஜ்ரங்தள் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று டெல்லி காவல்துறைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மிரட்டல் விடுத்துள்ளது. ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தை அனுமதியின்றி நடத்தியதற்காக அதன் ஏற்பாட்டாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து, விஎச்பி தலைவர் பிரேம் சர்மாவை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இதனை காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) உஷா ரங்னானி பிடிஐயிடம் தெரிவித்தார். “விஎச்பி மற்றும் பஜ்ரங்தள் செயற்பாட்டாளர்கள் மீது எப்ஐஆர்…

மேலும்...

மசூதிகளுக்கு அருகில் ஹனுமான் பாடல் ஒலிக்க தடை – மகாராஷ்டிரா காவல்துறை உத்தரவு!

நாசிக் (18 ஏப் 2022): மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹனுமான் ஊர்வலம் மற்றும் பஜனையின்போது மசூதிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஒலிபெருக்கியில் ஹனுமான் பாடல் இசைக்க தடை விதித்து நாசிக் நகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நகரின் காவல் ஆணையர் தீபக் பாண்டே ANI செய்தியாளர்களிடம் கூறும்போது, ​​“ஹனுமான் ஊர்வலம் மற்றும் பஜனைக்கு முன் அனுமதி பெற வேண்டும். மசூதிகளில் பாங்கு அழைப்புக்கு முன்னும் பின்னும் 15 நிமிடங்களுக்கு ஹனுமான் பாடல் இசைக்க அனுமதி இல்லை….

மேலும்...

மத்திய பிரதேசம் கலவரம் – இப்ரீஸ் கான் மரணத்தை உறுதி செய்தது காவல்துறை!

கார்கோன் (18 ஏப் 2022): மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஏற்பட்ட ராமநவமி கலவரத்தை அடுத்து கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த இப்ரீஸ் கானின் மரணத்தை கார்கோன் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி காணாமல் போன ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். எனினும் காவல்துறை இப்ரீஸ் மரணத்தை அறிவிக்காமல் இருந்தது. சம்பவம் குறித்து இப்ரீஸின் சகோதரர் இக்லாக் கூறுகையில், நானும் எனது சகோதரர் இப்ரீஸும் இப்தார் நோன்பு துறப்புக்காக மசூதிக்குச் சென்று திரும்பி…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான சமூகவலைத்தள பதிவு – கர்நாடகாவில் வெடித்த வன்முறை!

ஹூப்பள்ளி (17 ஏப் 2022): கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் முஸ்லீம் சமூகத்தினரை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் ஒருவர் பதிவிட்ட நிலையில் இதற்கு எதிராக காவல்துறை சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி காவல்நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முஸ்லீம் சமூகத்தினரை இழிவுபடுத்தி பதிவிட்டதை அடுத்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைதான அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் பழைய ஹூப்ளி காவல்…

மேலும்...

எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி -அதிர்ச்சியில் பாஜக!

கொல்கத்தா (16 ஏப் 2022): மேற்கு வங்கம்,பீகார் மாநிலங்களில் இன்று வெளியான இடைத்தேர்தல் முடிவுகளில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி கிடைக்கவில்லை/ பாரதிய ஜனதா வசம் இருந்த அசன்சோல் நாடாளுமன்ற தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட முன்னாள் பாலிவுட் நட்சத்திரம் சத்துருகன் சின்ஹா கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சின்ஹா ஆரம்பத்திலிருந்தே பாரதிய ஜனதா கட்சியின் அக்னிமித்திரா பாலை பின்னுக்குத்தள்ளி, முன்னிலை வகித்து வந்தார். சின்ஹாவுக்கு வெற்றி…

மேலும்...

வீடுகளை இடித்த அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாட முஸ்லிம்கள் முடிவு!

போபால் (16 ஏப் 2022): மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு முஸ்லிம்களின் வீடுகளை இடித்த நிலையில் இதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசம் கார்கோன் நகரில் ராமநவமி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் வன்முறையில் ஈடுபட்டதாக முஸ்லிம்களின் வீடுகளை மட்டும் அரசு இடித்து தள்ளியுள்ளது. இதனால் பலர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். “அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்று போபால் ஷஹர் காசி…

மேலும்...

பாப்புலர் ஃப்ரெண்ட் நிர்வாகி படுகொலை – ஆர்.எஸ்.எஸ் மீது குற்றச்சாட்டு!

கோழிக்கோடு (15 ஏப் 2022): கேரளாவில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா தலைவர் சுபைர் கொடூராமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் என பாப்புலர் ஃப்ரெண்ட் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் சிபி முகமது பஷீர் கூறுகையில். எலப்புள்ளி பாரா வட்டாரத் தலைவர் சுபைர், வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து தந்தையுடன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது கார் மோதி கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்….

மேலும்...

இஃப்தார் நோன்பு துறக்கும் நேரத்தில் காவல்துறை முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல்!

கார்கோன் (15 ஏப் 2022): மத்திய பிரதேசம் கார்கோனில் வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் குறிப்பாக காவல்துறையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். காவல்துறையின் மிருகத்தனத்தை பிரதிபலிக்கும் ஏராளமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட நகரின் சில பகுதிகள் 144 பிரிவின் கீழ் ஊரடங்கு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. பத்திரிக்கையாளர் அர்பாப் அலி பகிர்ந்துள்ள வீடியோவில், ஞாயிற்றுக்கிழமை நகரில் வெடித்த கலவரத்தின் போது , நோன்பு திறக்கும் வேளையில் பால் வாங்க வெளியே வந்த ஒரு…

மேலும்...

ராம நவமியின் போது குறிவைக்கப்பட்ட முஸ்லீம்கள் – சட்டப்போராட்டத்தை கையிலெடுக்கும் பிஎஃஐ!

பெங்களூரு (15 ஏப் 2022): சமீப காலங்களில் குறிப்பாக இந்தியா முழுவதும் ராம நவமி பண்டிகையின் போது இந்துத்துவாவினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லீம் சமூகத்திற்கு ஆதரவாக பாதிக்கப்பட்டவர்களுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) சட்டப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள PFI சட்டப் பிரிவுகள் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை அணுகி வருவதாக PFI இன் தேசிய பொதுச் செயலாளர் அனீஸ் அகமது வெள்ளிக்கிழமை தெரிவித்தார்….

மேலும்...

முஸ்லீம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இந்துத்துவ சாமியார் கைது!

சீதாபூர் (14 ஏப் 2022): முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சாமியார் பஜ்ரங் முனி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு விழாவையொட்டி உத்தரப் பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனிதாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது. அந்த ஊர்வலம் ஷேஷே வாலி மசூதி அருகே சென்றடைந்தபோது பேசிய சாமியார் முனிதாஸ், எந்த ஒரு இந்து பெண்ணையும்…

மேலும்...