கேரளாவில் பக்ரீத் பண்டிகை ஜூலை 21 ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிப்பு!

கோழிக்கோடு (11 ஜூலை 2021): கேரளா மாநிலத்தில் வரும் ஜூலை 21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து கோழிக்கோடு தலைமை காஜி முகமது கோயா தங்கல் தெரிவிக்கையில், நாளை (12-07-2021) கேரளாவில், முதல் துல்-ஹஜ் பிறை 1 என்றும், எதிர்வரும் 21-07-2021 (புதன்கிழமை) அன்று கேரளாவில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படும் எனவும் தெரிவித்தார். பனக்காடு சையத் ஹைதராலி ஷிஹாப் தங்கல், சமஸ்தா தலைவர் ஜிஃப்ரி முத்துகோய தங்கல்…

மேலும்...

எங்களை மதிக்காத கட்சியில் எதற்கு இருக்கணும் – பாஜகவிலிருந்து விலகும் முக்கிய தலைவர்கள்!

மும்பை (11 ஜூலை 2021): மகாராஷ்டிராவின் ப்ரீதம் முண்டேவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதினான்கு பாஜக அலுவலக பொறுப்பாளர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பில் பாஜக எம்.பியும் மறைந்த கோபிநாத் முண்டேவின் மகளுமான ப்ரீதம் முண்டே-விற்கும் பதவி அளிக்கப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. “எங்கள் தலைவர் மதிக்கப்படாத இடத்தில் அந்த கட்சியில் நீடிப்பதன் அர்த்தம் என்ன?” என்பதாக கட்சியிலிருந்து இதுவரை விலகியவர்கள் தெரிவித்துள்ளனர். ப்ரிதம் முண்டே அமைச்சரவை பதவி…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான கீழ்த்தரமான பேச்சு – கேட்டு ரசித்துக்கொண்டிருந்த போலீஸ்!

புதுடெல்லி (10 ஜூலை 2021): ஹரியானாவில் பாஜக செய்தித் தொடர்பாளரும் கர்னேசேனா தலைவருமான சூரஜ் பால் அமு முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காதது பலரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹரியானாவின் பட்டோடியில் உள்ள மகாபஞ்சாயத்தில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், கிராமத் தலைவர்கள் மற்றும் பல்வேறு கோராக்ஷா குழுக்கள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. கூட்டத்தில் ஹரியானா பாஜக செய்தித் தொடர்பாளரும், கர்னிசேனா…

மேலும்...

கொரோனா மீண்டும் பரவல் – இரண்டு நாள் முழு ஊரடங்கு!

திருவனந்தபுரம் (10 ஜூலை 2021): கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் (ஜூலை10), நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் வார இறுதி நாட்களான இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கேரளாவில் கெரோனா உறுதி செய்யப்படும் நபர்களின் விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இதனால், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்தது. முழு ஊரடங்கையொட்டி அரசு, தனியார்…

மேலும்...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

புதுடெல்லி (10 ஜூலை 2021): இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமும் கலக்கமும் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 42 ஆயிரத்து 766 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப் பட்டவர்களில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை பெற்று…

மேலும்...

திரிணாமுல் காங்கிரஸில் இணையும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன்!

கொல்கத்தா (05 ஜூலை 2021): முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி திரிணாமுல் காங்கிரசில் இணையவுள்ளார். மேற்கு வங்கத்தின் ஜாங்கிபூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனுமான அபிஜித் முகர்ஜி, கடந்த சில வாரங்களாக டி.எம்.சி தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முன்னதாக முகர்ஜி கடந்த மாதம் டி.எம்.சி தலைவர் அபிஷேக் பானர்ஜியை சந்தித்தார். இதனை அடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் டிஎம்சியில் இணையவுள்ளதாக…

மேலும்...

பதவியேற்ற வேகத்தில் சர்ச்சையில் சிக்கிய பாஜக முதல்வர்!

டேராடூன் (04 ஜூலை 2021): உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்கும் புஷ்கர்சிங் தாமி பதவியேற்ற வேகத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக புஷ்கர்சிங் தாமியை பாஜக நியமித்துள்ளது. சர்ச்சைக்கு பெயர் போன இவர், 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2015-ம் ஆண்டில் புஷ்கர்சிங், அகண்ட பாரதம் வரைபடத்துடன் போட்ட ட்வீட் இப்போது சர்ச்சையாகி உள்ளது. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி இந்த ட்வீட்டை போட்டிருக்கிறார் புஷ்கர்சிங் தாமி. அதில், ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிகள்;…

மேலும்...

கோவிட் காலத்தில் சவுதிக்கு செல்ல முயலும் இந்தியர்களை சிக்கலில் சிக்க வைக்கும் முகவர்கள்!

புதுடெல்லி (04 ஜூலை 2021): விமான தடை காரணமாக சவுதிக்கு செல்ல முடியாத இந்தியர்களை பயண முகவர்கள் சிலர் சிக்கலில் சிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா சவுதி அரேபியா இடையேயான விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்ப கட்டத்தில், துபாய், மஸ்கட்,பஹ்ரைன் வழியாக சிக்கலின்றி சிலர் சவூதி சென்றனர் . ஆனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால் இவற்றின் பாதை மூடப்பட்டது. இதனால் இந்தியர்கள் சவுதிக்கு பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது….

மேலும்...

கொரோனா மூன்றாவது அலை எப்படி இருக்கும்? – ஆய்வு தகவல்!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கொரோனா மூன்றாவது அலை பரவினால், அது கொரோனாவின் முதல் அலைக்கு ஒத்ததாக இருக்கும். அல்லது அதைவிட குறைவானதாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. ஒன்றிய அரசின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிபுணர் குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த மதிப்பீடு அமைந்துள்ளது. கான்பூர் ஐஐடி அகர்வால், ஹைதராபாத் ஐ.ஐ.டி . கனித் கார், வித்யாசாகர் குழுவின் உறுப்பினர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். மூன்றாவது அலையானது நோய்…

மேலும்...

கோவேக்சின் 77.8 சதவீதம் செயல்திறன் கொண்டது – 3 ஆம் கட்ட பரிசோதனை வெளியீடு!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்படுகிறது என்றும் டெல்டா வைரஸுக்கு எதிராக 65.2% செயல்திறன் கொண்டது என்றும் 3 ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது….

மேலும்...