வேலையில்லா இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 2000 – காங்கிரஸ் அதிரடி!

பெங்களூரு (16 ஜன 2023): “கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வேலையில்லாத இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா 2000 ரூபாய் வழங்கப்படும்!” என்று பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் மகளிர் மாநாட்டின் தொடக்க விழாவில் பிரியங்கா காந்தி பேசினார். மேலும், கர்நாடகா மாநிலத்தில் பெரும் ஊழல் நடந்து வருவதாகவும், பெண்களுக்காக மட்டுமே சிறப்பு தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார். மாநிலத்தில் மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது. மேலும், அரசின் 1.5 லட்சம்…

மேலும்...

மாணவி தற்கொலை வழக்கில் பாஜக தொண்டர் கைது!

பெங்களூரு (16 ஜன 2023): கர்நாடகாவில் மைனர் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பாஜக பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு மாவட்டம் குத்ரேமுக் பகுதியைச் சேர்ந்த நித்தேஷ் (25), அப்பகுதியில் பாஜக பிரமுகராவார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். பின்பு மாணவியை நித்தேஷ் திருமணம் செய்ய மறுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கில் பாஜக பிரமுகரான…

மேலும்...

விஐபி ஹஜ் ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு!

புதுடெல்லி (14 ஜன 2023): உயர்மட்ட அரசியலமைப்பு பதவிகள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகம் ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு இருக்கும் விஐபி ஹஜ் ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஹஜ்ஜில் விஐபி ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவரவும், விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பிரதமர் மோடி பதவியேற்ற முதல் நாளிலேயே தீர்மானத்தை முன்வைத்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது ஹஜ் தொடர்பாக விஐபி…

மேலும்...

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டதா? -உண்மை தகவல் என்ன?

புதுடெல்லி (14 ஜன 2023): ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், ஆஸ்கார் 2023 விருதுகளுக்கான 10 பிரிவுகளில் எதற்கும் படம் தேர்வு செய்யப்படவில்லை என்பதை உண்மை கண்டறியும் ALT நியூஸ் உறுதிபடுத்தியுள்ளது. 95வது அகாடமி விருதுகளுக்குத் தகுதியான திரைப்படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் இந்திய திரைப்படங்களான ஆர்ஆர்ஆர், காந்தாரா, தி காஷ்மீர் ஃபைல்ஸ், கங்குபாய் கதியாவதி, மீ வசந்தராவ், துஜ்யா சதி கஹி ஹி, ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட், தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ,…

மேலும்...

ஆயுதங்கள் வைத்திருக்கும் இந்து தெய்வங்கள் மீது வழக்கு பதியட்டும் -இந்துமத தலைவரின் சர்ச்சை பேச்சு!

பெங்களூரு (13 ஜன 2023): இந்துக்கள் வீட்டுக்குள் ஆயுதங்கள் வைத்திருப்பது குற்றமல்ல என ஸ்ரீராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார். இந்து பெண்களின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு இந்து வீடுகளிலும் ஆயுதங்கள் வைக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். கலபுர்கியில் நேற்று நடைபெற்ற இந்து சமயத் தலைவர்கள் கூட்டத்தில் பிரமோத் முத்தாலிக் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரமோத் முத்தாலிக் இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துகளை…

மேலும்...

60 வயது நோயாளி மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 22 வயது இளைஞர் கைது!

நாசிக் (12 ஜன 2023): பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள அப்நகர் பகுதியில் செவ்வாய்கிழமை, 22 வயது இளைஞன் ஒரு வீட்டுக்குள் புகுந்து 60 வயது மூதாட்டி பெண்ணை பாலியல் சித்திரவதை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மூதாட்டி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது சகோதரர் அருகில் வசிக்கிறார். செவ்வாய்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் 22 வயதுடைய வாலிபர்…

மேலும்...

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் மீதான தடை ரத்து!

மும்பை (11 ஜன 2023): ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு பேபி பவுடரை தயாரிக்கவும், விற்கவும், விநியோகிக்கவும் விதிக்கப்பட்ட தடையை நீக்கிய மும்பை உயர் நீதிமன்றம் புதன்கிழமை அந்நிறுவனம் பேபி பவுடரை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகள் கவுதம் படேல் மற்றும் எஸ் ஜி டிகே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், 2018 டிசம்பரில் கைப்பற்றப்பட்ட நிறுவனத்தின் பேபி பவுடரின் மாதிரியை சோதனை செய்வதில் தாமதம் செய்ததற்காக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) மீது…

மேலும்...

பயணிகளை பரிதவிக்கவிட்டு பறந்த விமானம்!

பெங்களூரு (10 ஜன 2023): 54 பயணிகளை விட்டுவிட்டு அவர்களுடைய லக்கேஜ்களுடன் புறப்பட்டு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரு, இன்று காலை 6:30 மணி அளவில் பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு கோப் பர்ஸ்ட் என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானம் பாஸ்களுடன் காத்திருந்த 54 பயணிகளை விட்டுவிட்டு அவர்களுடைய லக்கேஜ்களுடன் மட்டும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விமான நிலையத்தில் காத்திருந்த…

மேலும்...

இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்து!

ஜித்தா (10 ஜன 2023): இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒன்றே முக்கால் லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தத்தில் இந்திய தூதரகம் முஹம்மது ஷாஹித் ஆலம் மற்றும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான சவுதி அமைச்சர் டாக்டர் அப்துல்பத்தாஹ் சுலைன் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஜித்தா சுப்பர்டோமில் நடைபெற்ற ஹஜ் எக்ஸ்போவில் இந்த பேச்சுவார்த்தை கையெழுத்தானது. இந்த…

மேலும்...

வட இந்தியாவில் கடும் குளிர்; இரண்டு நாட்களில் 260 ரயில்கள் ரத்து!

புதுடெல்லி (10 ஜன 2023): வட இந்திய மாநிலங்களில் கடுமையான குளிர்காலம் தொடர்கிறது. டெல்லியில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. பனிமூட்டம் காரணமாக சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மூடுபனி காரணமாக கடந்த 2 நாட்களில் 260 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டெல்லியில் காற்றின் தரம் குறைந்ததால் பிஎஸ்3 பெட்ரோல் மற்றும்…

மேலும்...