வெற்று பேச்சு அவசியமில்லை தீர்வென்ன? – ராகுல் காந்தி சாடல்!

புதுடெல்லி (22 ஏப் 2021): கொரோனா தொற்று காரணமாக, தனது வீட்டில் தனிமைபடுத்தி கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் கையாலாகாத தனத்தை சாடி டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில் , ” நான் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு உள்ளேன். நாடு முழுவதும் இருந்து வரும் அதிர்ச்சிகரமான செய்திகளை பார்த்து வருகிறேன். கொரோனா வைரசால் மட்டுமல், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளாலும் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வெற்று பேச்சுகளும், பயனில்லாத விழாக்களும்…

மேலும்...

ஆக்சிஜன் வாயு கசிந்து 22 கொரோனா நோயாளிகள் மரணம்!

நாசிக் (21 ஏப் 2021): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பல்வேறு பகுதிகள் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசிகள், நோயாளிகளுக்கு வழங்கும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் வாயுவை அந்தந்த மருத்துவமனைகளேயே சேமித்து வைத்து அங்குள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாயு சிலிண்டர் மூலம் பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள சாகீர் ஹூசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு…

மேலும்...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் விலை உயர்வு!

புதுடெல்லி (21 ஏப் 2021): கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸை 250 ரூபாய் என்ற விலைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் இன்ஸ்டிடியூட் உயர்த்தியுள்ளது. அதன்படி, இனி கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. இந்த விலை மத்திய அரசு வெளியிட்ட…

மேலும்...

குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனைகளாக மாறிய மசூதிகள்!

வதோதரா (21 ஏப் 2021); இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக ஆளும் குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மசூதிகள் மருத்துவமனைகளாக மாறியுள்ளன. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலால் குஜராத்தில் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், குஜராத் மாநில மசூதிகள் மருத்துவமமனைகளாக செயல்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள மசூதியில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை…

மேலும்...

ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி!

புதுடெல்லி (20 ஏப் 2021): காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறி ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, சமீபத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவர்களை, பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிக்குமாறும், பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

இந்திய பயணத்திற்கு உலக நாடுகள் தடை!

புதுடெல்லி (20 ஏப் 2021): இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் பரவி வரும் இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா, தங்கள் நாட்டில் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சில உலக நாடுகள், இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதை தடை செய்துள்ளனர். இம்மாத தொடக்கத்தில் நியூசிலாந்து நாடு, இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்தது. தற்போது ஹாங்காங்கும் இந்திய பயணிகள் விமானத்திற்கு 14 நாட்கள் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று…

மேலும்...

இந்தியாவில் கொரோனாவின் கோர முகம் – செய்வதறியாது திணறும் மருத்துவத்துறை!

புதுடெல்லி (18 ஏப் 2021): இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,88,109 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,38,423 பேர் டிஸ்சார்ஜ்…

மேலும்...

காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – மேலும் ஒரு வேட்பாளர் பலி!

கொல்கத்தா (15 ஏப் 2021): மேற்கு வங்க காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. வருகிற 17ந்தேதி 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 45 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 39 பேர் பெண்கள் ஆவர். தேர்தல் ஜல்பைகுரி, கலிம்போங், டார்ஜிலிங், நாடியா, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் புர்பா வர்தமான்…

மேலும்...

இந்தியாவில் எகிறும் கொரோனா பரவல் – ஒரேநாளில் இவ்வளவா?

புதுடெல்லி (15 ஏப் 2021): இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் எகிறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக…

மேலும்...

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பு!

புதுடெல்லி (14 ஏப் 2021): நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தொடர்ந்து, இன்று பிற்பகல் 12 மணியளவில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய…

மேலும்...