மத்திய அரசுக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவு – டெண்டுல்கர் மீது விசாரணைக்கு சிவசேனா அரசு உத்தரவு!

மும்பை (08 பிப் 2021): மத்திய அரசுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகவும் ட்விட்டரில் பதிவிட்ட பிரபலங்களின் பதிவுகள் குறித்து விசாரணை நடத்த மகாரஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரெஹானா குரல்…

மேலும்...

இந்தியாவில் ட்விட்டருக்கு தடை வருமா?

புதுடெல்லி (08 பிப் 2021): இந்திய அரசின் கோரிக்கைக்கு ட்வீட்டர் சமூக வலைத்தளம் இதுவரை பதிலளிக்காததால் ட்வீட்டர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கூடும் என தெரிகிறது. விவசாயிகளின் போராட்டம் தொடர்பான 1,000 க்கும் மேற்பட்ட ட்வீட்களை நீக்குமாறு ட்விட்டரை மத்திய அரசாங்கம் கேட்டுள்ளது. நீக்கக் கோரப்பட்ட 1178 ட்விட்டர் கணக்குகள் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் கணக்குகள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள் வேலைநிறுத்தம் குறித்து தவறான மற்றும் ஆத்திரமூட்டும் செய்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை…

மேலும்...

பாஜக தலைவருக்கு புடவை உடுத்தி வளையல் அணிவித்து சித்தரவதை செய்த சிவசேனாவினர்!

சோலாப்பூர் (08 பிப் 2021): மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சனம் செய்த பாஜக தலைவர் மீது தாக்குதல் நடத்திய சிவசேனாவினர் அவருக்கு புடவை உடுத்தி வளையல் அணிவித்து சித்ரவதை செய்துள்ளனர். கடந்த காலங்களில் உத்தவ் தாக்கரேவை விமர்சிப்பவர்களை சிவசேனாவினர் தாக்கியுள்ளனர். முன்னாள் கடற்படை அதிகாரியான மதன் சர்மா, தாக்கரேவை கேலி செய்யும் கார்ட்டூனைப் பகிர்ந்ததற்காக கடந்த ஆண்டு சிவசேனாவினரால் தாக்கப்பட்டார். இந்நிலையில் உத்தவ் தாக்கரேயை விமர்சனம் செய்த பாஜக தலைவர் ஷிரிஷ் கட்டேகரை முற்றுகையிட்ட சிவசேனாவினர்…

மேலும்...

டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர் ஆகியோர் புகழ் மங்கிவிட்டது – ராஜ் தாக்கரே விமர்சனம்!

மும்பை (07 பிப் 2021): லதா மங்கேஷ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் புகழ் மங்கிவிட்டதாக மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,” விவசாய பிரச்சினை அரசாங்கத்தின் ஒரு விஷயம். இதற்கும் நாட்டு பற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை.” என்று தாக்கரே கூறியுள்ளார். நாட்டின் முன்னணி விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களின் அரசாங்க சார்பு ட்வீட்டுகள் பல விமர்சனங்களை ஈர்த்துள்ளன. இந்நிலையில் ராஜ்தாக்கரே இவ்வாறு தெரிவித்துள்ளார். அக்‌ஷய் குமார் போன்றவர்கள்…

மேலும்...

பாஜகவை விட்டு விலகும் முக்கிய தலைவர்கள்!

அமிர்தசரஸ் (07 பிப் 2020): பஞ்சாபில் உள்ளாட்சி மன்றத் தேர்தளுக்கு ஏழு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பல பாஜக முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். கடந்த மாதம் மட்டும் கட்சியின் முக்கிய தலைவரான மல்விந்தர் சிங் காங் உட்பட 20 பாஜக தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறினர். மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு பயந்து பாஜக பல இடங்களில் பிரச்சாரம் செய்யக்கூட முடியவில்லை. பஞ்சாபில் எட்டு மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சி மன்றங்கள் / நகர்ப்புற பஞ்சாயத்துகளில்…

மேலும்...

கங்கனா ரனாவத்தின் பதிவுகள் மீது ட்விட்டர் அதிரடி நடவடிக்கை!

புதுடெல்லி (05 பிப் 2021): நடிகை கங்கனா ரனாவத்தின் விவசாயிகளுக்கு எதிரான பதிவுகளை நீக்கம் செய்து ட்விட்டர் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லி விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பலர் சர்வதேச பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் சர்மா விவசாயிகள் போராட்டம் குறித்து தனது டுவிட்டரில், ’நாம் அனைவரும் ஒன்றாக இருக்கும்போது இந்தியா வலுவாக இருக்கிறது. விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு…

மேலும்...

முஸ்லிம்லீக் எம்பி குஞ்சாலி குட்டி திடீர் ராஜினாமா!

புதுடெல்லி (03 பிப் 2021): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி பி.கே.குஞ்சாலிக்குட்டி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். கேரள மாநிலம் எம்பியான குஞ்சாலி குட்டி எதிர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக இந்த ராஜினாமாவை செய்துள்ளார். முஸ்லிம் லீக் தலைமையின் முடிவின்படி அவர் ராஜினாமா செய்துள்ளதாக குஞ்சாலி குட்டி தெரிவித்துள்ளார். குஞ்சாலி குட்டி தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார். குஞ்சாலி குட்டி ராஜினாமாவை அடுத்து, தற்போது இ.டி. முகமது பஷீர்…

மேலும்...

டிவிட்டர் சமூக வலைத்தளத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை!

புதுடெல்லி (03 பிப் 2020): விவசாயிகள் போராட்டத்தை திசை திரும்பும் வகையில் உள்ள பதிவுகளை நீக்கக் கோரி மத்திய அரசு டிவிட்டருக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே 250 க்கும் மேற்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டன. எனினும் அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்கவில்லையெனில் டுவிட்டர் நடவடிக்கைகளை எதிர்கொள்ளக்கூடும், மத்திய அரசு இன்று எச்சரித்து உள்ளது. ஆதாரமற்ற அடிப்படையில் சமூகத்தில் துஷ்பிரயோகம், ம்ற்றும் பதற்றத்தை உருவாக்குவதற்கான உந்துதல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இனப்படுகொலைக்கு தூண்டுவது பேச்சு சுதந்திரம் அல்ல; இது சட்டம் ஒழுங்குக்கு…

மேலும்...

காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் உற்சாகம் கொடுக்கும் முடிவு!

புதுடெல்லி (01 பிப் 2021): மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. டெல்லி மாநில காங்கிராஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பின், மாநில தலைவர் அனில்குமார் கூறியதாவது: “நாட்டில் மிகவும் ஆபத்தான அரசியல் சூழல் நிலவுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அடுத்தடுத்து தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து, ராகுல் தொடர்ந்து போராடி வருகிறார். ஜனநாயக விரோத சக்திகளை விரட்டவும், காங்கிரஸ்…

மேலும்...

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை முந்திய காங்கிரஸ்!

ஜெய்ப்பூர் (31 ஜன 2021): ராஜஸ்தான் நகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காங்கிரஸ் முன்னணி வகிக்கிறது. இதுவரை வெளியாகியுள்ள 2601 இடங்களில் காங்கிரஸ் 1012 இடங்களிலும் . பாஜக 947 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. 20 மாவட்டங்களில் உள்ள 90 உள்ளாட்சி அமைப்புக்களுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 3035 வார்டுகளில் 994க்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெறு…

மேலும்...