மத்திய அரசின் நிபுணர் குழு உறுப்பினராக லூலூ குழும உரிமையாளர் யூசுப் அலி நியமனம்!

புதுடெல்லி 18 ஜன 2021): வெளிநாட்டவர் குடியேற்றம் தொடர்பான கொள்கை பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவின் உறுப்பினராக லூலூ நிறுவன உரிமையாளர் யூசுப் அலி நியமிக்கப் பட்டுள்ளார். யூசுப் அலி வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் லூலூ குழுமம் மூலம் பல ஹைப்பர் மார்கெட்டுகளை நியமித்து இந்தியாவின் விரல் விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர்களின் ஒருவராக விளங்குகிறார். இவர் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ஐ.சி.எம் (இந்தியா இடம்பெயர்வு மையம்) ன் உறுப்பினராக…

மேலும்...

அர்னாப் வாட்ஸ் ஆப் உரையாடலில் வெளியான மற்றுமொரு அதிர வைக்கும் தகவல்!

புதுடெல்லி(18 ஜன 2021): புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அர்னாப் கோஸ்வாமி கொண்டாடியதற்கு ஆதாரமாக வாட்ஸ் ஆப் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் BARC தலைமை அதிகாரி பார்த்தோ தாஸ் குப்தா உடனான வாட்ஸ் ஆப் உரையாடலில் மற்றுமொரு அதிர வைக்கும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அந்த உரையாடலில் பார்த்தோ தாஸ் குப்தா பிரதமரின் ஊடக ஆலோசகராக மாறுவதற்கு, அர்னாப் கோஸ்வாமியின் உதவியை கோரியாதும் அர்னாபின் வாட்ஸ் ஆப் உரையாடல் மூலம்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்குப் பக்க விளைவுகள்!

புதுடெல்லி (17 ஜன 2021): டெல்லியில் கோவிட் தடுப்பூசி போட்டுகொண்டவர்களில் 52 பேருக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை அரசு செயல்படுத்தத் தொடங்கியது. இதுவரை மொத்தம் 1,65,714 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், டெல்லியில் கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 52 பேருக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் ஒருவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியைத் தவிர வேறு எந்த…

மேலும்...
Temple Attack bjp

கோவில்கள் மீதான தாக்குதல்களில் பாஜகவினருக்குத் தொடர்பு – டிஜிபி தகவல்!

புதுடெல்லி (17 ஜன 2021): ஆந்திர மாநிலத்தில் கோயில்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாஜகவினருக்குத் தொடர்பிருப்பதாக ஆந்திர டிஜிபி சவாங் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன. சில கோயில்கள் சேதமடைந்துள்ளன. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பலர் கைதாகியுள்ளார்.. இந்நிலையில் இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்களும் 4 பேர்…

மேலும்...

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு!

ஐதராபாத் (16 ஜன 2021): கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த அந்நிறுவன படிவத்தில் கூறப்பட்டிருப்பதாவது : தடுப்பூசி பெறுநர்களுக்கு ஏதேனும் பாதகமான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு மற்றும் சிகிச்சை வழங்கப்படும். மேலும், பக்கவிளைவுகள் தடுப்பூசிக்குத் தொடர்புடையது என நிரூபிக்கப்பட்டால், இழப்பீடும்…

மேலும்...

அர்னாப் வாட்ஸ் ஆப் உரையாடல் – முன்னாள் BARC தலைமை அதிகாரி மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (16 ஜன 2021): : ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமியுடன் நடந்த வாட்ஸ்அப் உரையாடல் கசிந்துள்ள நிலையில் முன்னாள் பார்க் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ் குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிஆர்பி முறைகேடு தொடர்பான வழக்கில் பார்த்தோ தாஸ் குப்தாவைக் கடந்த மாதம் மும்பை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் ஆப் உரையாடல் இணையத்தில் கசிந்து இவ்வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச்…

மேலும்...

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி குறித்து பிரதமர் கூறுவது என்ன?

புதுடெல்லி (16 ஜன 2021): இந்தியாவின் கொரோனா தடுப்பூசி வழங்கலை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மருத்துவ தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் தடுப்பூசி போட்ட பிறகும் குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முகமூடிகள் மற்றும் சமூக இடைவெளிகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். என மோடி கேட்டுக்கொண்டார். “எங்கள் தடுப்பூசி உருவாக்குநர்கள் மீது உலகளாவிய நம்பகத்தன்மை உள்ளது. உலகளவில்…

மேலும்...

புல்வாமா தாக்குதலை முன்னரே தெரிந்துகொண்ட அர்னாப் கோஸ்வாமி – பரபரப்பு தகவல்!

புதுடெல்லி(16 ஜன 2021): இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதல் குறித்து அர்னாப் கோஸ்வாமி முன்கூட்டியே தெரிந்து கொண்டதற்கான வாட்ஸ்ஆப் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அரசினால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும், டிஆர்பி ஊழல் வழக்கில் மேலும் ஒரு முன்னேற்றமாக, குடியரசு தொலைக்காட்சியின் நெறியாளர் அர்னப் கோஸ்வாமி புல்வாமா தாக்குதல் நடப்பது தொடர்பாக முன்னரே தெரிந்திருந்ததற்கு ஆதாரமாக, வாட்ஸ்ஆப் அரட்டை இணையத்தில் கசிந்துள்ளது. டி.ஆர்.பி ரேட்டிங்கைத் தனக்கு சாதகமாக கையாளவும், பாஜக அரசாங்கத்திடம் உதவி பெறவும் அவர்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிராக விஷம கோஷங்களை எழுப்பிய இந்துத்வாவினர் கைது!

லக்னோ (15 ஜன 2020): உத்திர பிரதேசத்தில் இந்துத்வாவினர் நடத்திய பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷமிட்டவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் ஷிகார்பூர் நகரில் ராமர் கோவில் கட்ட நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்ட இருவர் முஸ்லிம்களுக்கு எதிராக விஷமத்தனமான கோஷங்களை எழுப்பியுள்ளனர். “இந்துஸ்தான் இந்துக்களுக்கு சொந்தம்…, முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” என்கிற வகையில் இந்த கோஷங்கள் இருந்துள்ளன. அந்த வீடியோ கிளிப் சமூக…

மேலும்...

பாஜகவின் வெற்றிக்கு உதவுவதே உவைஸிதான் – பாஜக எம்பி பகீர் தகவல்!

புதுடெல்லி (14 ஜன 2021): பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியே கரணம் என்பதாக, பாஜக எம்.பி சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார். பிகாரில் தேஜஸ்வி யாதவின் வெற்றியை தட்டிப் பறித்தது உவைஸியே என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் சாக்ஷி மகாராஜ் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள மேற்கு வாங்க தேர்தலிலும் உவைஸி பாஜகவின் வெற்றிக்கு உதவுவார். என்பதாக சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார். மேலும் சாக்ஷி மகாராஜ் தெரிவிக்கையில்…

மேலும்...