திருச்சி போலீசை கொலை செய்தது என்? – கைதான மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம்!

திருச்சி (23 நவ 2021): சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிக்கொன்றது  குறித்து கைதான மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான். திருச்சி மாவட்டம், நாவல்பட்டு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான மணிகண்டன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- கைதான மணிகண்டன் ஆடுகளை திருடி விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டவர். ஆடுகளை சமயபுரம் ஆட்டுச்சந்தை உள்ளிட்ட சந்தைகளிலும், இறைச்சி கடைகளிலும் விற்று வந்துள்ளார். இதற்கு துணையாக உறவுமுறையான 14 வயது சிறுவனையும்…

மேலும்...

தமிழகத்தை தொடர்ந்து மிரட்டும் மழை – 3 நாட்களுக்கு தொடரும் என அறிவிப்பு!

சென்னை (23 நவ 2021): தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: -தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. -குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும். -காற்றழுத்த தாழ்வு…

மேலும்...

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

சென்னை (22 நவ 2021): நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

மேலும்...

சொந்த கட்சியையே கண்டிக்கிறாரே – அண்ணாமலையை உசுப்பேற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

சென்னை (21 நவ 2021): தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பாஜக நாளை போராட்டம் நடத்த உள்ளது. இந்த போராட்டத்தை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என்னது, விலை உயர்வை கண்டித்து போராட்டமா? ஆனால், அதற்கு முழு காரணம் வரி உயர்வு தானே? அதுவும், அனைத்து வரி உயர்வையும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சி அதிமுகவும் தானே செய்தன அப்போது,ஒரு…

மேலும்...

திருச்சி எஸ்.ஐ.படுகொலை – ஜவாஹிருல்லா பரபரப்பு அறிக்கை!

சென்னை (21 நவ 2021): திருச்சி எஸ்.ஐ.பூமிநாதன் திருடர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மமக தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்., அதில் கூறப்பட்டிருப்பதாவது: “திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆக பணியாற்றி வரும் பூமிநாதன் புதுக்கோட்டை கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பல் ஒன்றினால் அரிவாளால்சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கின்றது. இரவு பகல் என்று பாராமல் உயிருக்கும் மேலாகக் கடமையை நேசித்து பணியாற்றிய பூமிநாதன்…

மேலும்...

நடிகர் சூர்யா அறக்கட்டளையில் பயின்ற மாணவர் உலக சாதனை!

சென்னை(19 நவ2021): நடிகர் சூர்யா அறக்கட்டளையில் பயின்ற பழங்குடி இன மாணவர் பன்னிர் என்பவர் 4 மணி நேரத்தில் 262 கவிதை தொகுப்புகள் எழுதி உலக சாதனை படைத்துள்ளார். நடிகர் சூர்யாவுக்கு ஒரு சாரார் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் ஒருபுறம் அவரது அறக்கட்டளை சார்பில் பயில்பவரின் சாதனை சூர்யாவுக்கு உற்சாகமூட்டுவதாக உள்ளது.

மேலும்...

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி (17 நவ 2021): பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அதன் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும்...

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டாக்டர் ரஜினிகாந்த் கைது!

கரூர் (17 நவ 2021): கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாய், கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகாரளித்திருந்தாா். இந்த புகாரின்பேரில், மருத்துவா் ரஜினிகாந்த் மற்றும் அவரது மேலாளா் சரவணன் ஆகியோா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வந்தனர். இந்நிலையில், மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் தனிப்படை போலீசார்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலை தயாரிக்க உத்தரவு!

சென்னை (17 நவ 2021): தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலை தயாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட தகுதியான நபர்களில், 73 சதவீதம் பேருக்கு, முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவீதம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த அனைவருக்கும், விரைவில் தடுப்பூசி கிடைத்திடும் வகையில், வாரம்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பதிலாக, இரண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு உத்தேசித்துள்ளது. மேலும், இதுவரை…

மேலும்...

சென்னையில் மீண்டும் பின்னி எடுக்கும் கனமழை!

சென்னை (16 நவ 2021): சென்னையில் செவ்வாயன்று இரவு மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் சென்னை பெருவெள்ளத்தில் தத்தளித்தது. தற்போது ஓரளவுக்கு மழையிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் சென்னையில் சென்னையில் செவ்வாயன்று இரவு மீண்டும் மழை பெய்து வருகிறது. மீண்டும் மழை பெய்து வருவதால் சென்னை மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும்...