தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம் – அதிமுக நிர்வாகி அதிரடி கைது!

கோவை (06 ஜன 2021): பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிற நிலையில், இந்த வழக்கில்…

மேலும்...

நாங்கள் ஹீரோக்கள் அல்ல மருத்துவர்கள் – நடிகர் விஜய்க்கு டாக்டர் ஒருவரின் உருக்கமான கடிதம்!

சென்னை (05 ஜன 2020): கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் . டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவரின் சோஷியல் மீடியா போஸ்ட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது, டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும்…

மேலும்...

அதிமுக பாஜக கூட்டணியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் பாஜக தலைவர்!

ராணிபேட்டை (03 ஜன 2020): தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் வேட்பாளரே தமிழத்தில் ஆட்சி செய்வார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீண்டும் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்கிறது. முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய எல்.முருகன், “ முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையே அறிவிக்கும்” எனக் கூறினார். அவரது இந்தக் கருத்திற்கு எதிர்வினை ஆற்றிய, அதிமுக தலைவர்கள் அதனை மறுத்து, முதல்வர் வேட்பாளர் என்றுமே எடப்பாடி…

மேலும்...

இந்து இந்துகோயில் இடிப்பு – இ.யூ.முஸ்லிம் லீக் கண்டனம்!

சென்னை (02 ஜன 2021): பாகிஸ்தானில் இந்து இந்துகோயில் இடிக்கப்பட்டதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “பாகிஸ்தானில் 97 வடி சதவீதம முஸ்லிம்கள், 3 சதவீதம் மக்களே இந்து, சீக்கிய சிறுபான்மையினர். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்பட்டு, வெளியேற்றப்படுகிறார்கள். என்பதால் தான் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்று இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது….

மேலும்...

திமுக மீது முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி!

சென்னை (02 ஜன 2021): அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் ஆசாதுதீன் ஒவைசியை அழைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ள நிலையில், திமுகவின் முடிவு குறித்து அதன் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் அதிருப்தி அடைந்துள்ளது. லீக்கைத் தவிர,திமுக ஏ கூட்டணியில் உள்ள இதர முஸ்லிம் கட்சிகளும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவைசி மற்றும் திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாக செய்திகள்…

மேலும்...

உருமாறிய கொரோனா – தமிழகத்தில் ஒருவருக்கு உறுதி!

சென்னை (02 ஜன 2021): தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவில் 29 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய கொரனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். அவருக்கு தனி அறையில்…

மேலும்...

வைரலாகும் ரஜினியின் புதிய திடீர் வைரல் வீடியோ!

சென்னை (01 ஜன 2021): நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்பல்லோ மருத்துவமனைக்கு உரிய வீடியோவாக உள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் தான் அனுமதிக்கப்பட்ட அப்போலோ நிர்வாகக் குழுவினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். மேலும் அதில் “கடவுள் அருளால் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். உங்கள் சேவை மிகவும் சிறப்பானதாக இருந்தது” என்று கூறியதோடு மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைக் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். When Thalaiva…

மேலும்...

முதல்வர் எடப்பாடிக்கு ஸ்டாலின் அவசர கடிதம்!

சென்னை (01 ஜன 2021): மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்யக் கோரி- தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற- தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டக் கோருவது- குறித்து முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, நேற்று (31-12-2020) கேரள சட்டமன்றத்திலும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க…

மேலும்...

ஆர்.எஸ்.எஸ்ஸை பின்பற்றி செயல்பட வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்!

சென்னை (31 டிச 2020): ஆர்எஸ்எஸ் அமைப்பை போல் பாமகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கட்சியினரிடம் கூறுகையில், ‘ பாமகவினர் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கண்ணுக்குத் தெரியமால் தேர்தல் வேலைகளைச் செய்வார்கள் என்றும் அவர்களைப்போல் செயல்பட வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்தற்கான காரணம், பாமக நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதுதான்…

மேலும்...

அதென்ன சீமான் இப்படி சொல்லிட்டார் – அப்படின்னா அதிமுகவுடைய நிலை?

சென்னை (30 டிச 2020): திமுகவுக்கு சரியான போட்டி நாம் தமிழர்தான் அதிமுகவல்ல என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாள்வார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, நஞ்சில்லா உணவு அதுவே நம் உணவு என்று போராடியவர் நம்மாள்வார். எங்களை போன்றவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அவர் மறைந்து…

மேலும்...