சசிகலா விடுதலை குறித்து என்ன சொல்கிறார் எடப்பாடி?

கோவை (18 நவ 2020): ‘‘சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது’’என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். .முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: ‘‘7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் 313 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 6 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். உள்ஒதுக்கீடு குறித்து பெருமை பேசவில்லை. பெருமை அடைகிறேன். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் கொள்கை முடிவு. இந்தியாவிலேயே நீட்…

மேலும்...

முன்னாள் மத்திய அமைச்சர் பாஜகவை விட்டு விலகல்!

மும்பை (18 நவ 2020): மகாராஷ்டிராவில் தலைவர் ஏக்நாத் காட்ஸேவுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் மற்றொரு மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய் சிங் ராவ் கெய்க்வாட் பாட்டீல் இன்று பாஜகவிலிருந்து விலகியுள்ளார் மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் செவ்வாய்க்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். அவர் கட்சிக்காக பணியாற்ற தயாராக இருக்கிறார், ஆனால் கட்சியில் அவருக்கு மரியாதை இல்லை என்பதாகவும் எனவே நான் ராஜினாமா செய்கிறேன். ‘ ஜெய்சிங் ராவ் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம்…

மேலும்...

கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை (16 நவ 2020): கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வட தமிழகம் வரை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள்…

மேலும்...

பாஜக ஆதரவுடன் அழகிரி தொடங்கும் தனிக்கட்சி?

மதுரை (16 நவ 2020): நேற்று (நவம்பர் 15) மதுரையில் மு.க.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2021 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது புதிய கட்சி தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே முடிவுகள் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கொரோனா நோய் பரவல் காரணமாக எனது ஆதரவாளர்களைச் சந்திக்கவில்லை. எனது ஆதரவாளர்கள் என்னிடம் தான் உள்ளனர். அனைவரும் நன்றாக உள்ளனர். திமுகவில் புகைச்சல் அதிகமாகியுள்ளது. 2021 சட்டமன்றத்…

மேலும்...

நாமதான் ஆட்சி அமைப்போம் – தேஜஸ்வி திட்டவட்டம்!

பாட்னா (10 நவ 2020): பீகாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆட்சியே அமையும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. பீகாரில் 243 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பா.ஜனதா கூட்டணி – மகா கூட்டணிக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டது. தொடக்கத்தில் மகா கூட்டணி முன்னணி பெற்றிருந்தது. தற்போது என்.டி.ஏ. கூட்டணி முன்னிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாக்கு மையம்…

மேலும்...

முதல்வர் எடப்பாடி மீது எச் ராஜா பாய்ச்சல்!

சென்னை (09 நவ 2020): முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் மட்டும் கொரோனா பரவாதா? என்று எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த தடைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடை குறித்து எச் ராஜா தெரிவிக்கையில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் பங்கேற்ற கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் கூட்டத்தில் பரவாத கொரோனா நோய் தொற்று வேல்…

மேலும்...

நீட் தேர்வில் வெற்றி பெற்றும் வீண் – மருத்துவ படிப்பில் இடமில்லை!

விழுப்புரம் (07 நவ 2020): நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மாணவிக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தாய் தமிழ்ப் பள்ளி சுயநிதிப் பள்ளியாக இயங்கிவருகிறது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை இலவசமாக கல்வி பயின்ற மாணவி சந்திரலேகா, அருகிலுள்ள முருங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பயின்றுள்ளார். 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளிலும் மாணவி சந்திரலேகா…

மேலும்...

நவம்பர் 30 வரை பட்டாசு வெடிக்கத் தடை!

புதுடெல்லி (06 நவ 2020): டெல்லியில் காற்று மாசு மற்றும் பண்டிகை சீசன்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும், அதனால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். இந்நிலையில், நாளை முதல் நவம்பர் 30ம் தேதி வரை டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார். தடை விதிக்கப்பட்டிருப்பதால் டெல்லியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இதுபற்றி அமைச்சர்…

மேலும்...

தூத்துக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை – 6 பேர் கைது!

தூத்துக்குடி (5 நவ 2020): தூத்துக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகேயுள்ள தெற்கு கோட்டூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமைய்யா தாஸ் (51). பாஜக தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு சொந்தமான நிலத்தில், தென்திருப்பேரை கோனார் தெருவைச் சேர்ந்த இசக்கி (25) என்பவரின் மாடுகள் மேய்ந்துள்ளது. இதனை ராமையா தாஸ் தட்டிக் கேட்டதால்…

மேலும்...

தமிழக ஆளுநருக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்!

சென்னை (03 நவ 2020): தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்தார். ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு…

மேலும்...