ஹேப்பி மூடில் தேமுதிகவினர் – காரணம் இதுதான்!

சென்னை (08 அக் 2020): தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனராம். அண்மையில் கரோனா காரணமாக நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாக, நேற்று அக்கட்சியின் சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அவரின் உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாகவும், அவர் நாளை வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல்…

மேலும்...

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சென்னை (07 அக் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சமி ஒருமனதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்ற குழப்பம் ஏறக்குறைய இரண்டு மாத காலமாக நீடித்து வந்தது. இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக தெரிவித்தார். கடந்த சில…

மேலும்...
Roadside Hotel Vendors

ஆன்லைனில் தெருவோர உணவு விற்பனையாளர் வணிகம்!

தில்லி:(அக்டோபர் 06 ) ஆன் லைன் உணவு விநியோக நிறுவனம் ஸ்விக்கியுடன்  கைகோர்த்து தெருவோர உணவு விற்பனையாளர்களின் வணிகங்களை ஆன்லைனில் கொண்டு சென்றுள்ளது மத்திய அரசு. கடந்த ஜூன் மாதம் ஸ்விக்கியுடன் இணைந்து தெருவோர உணவு விற்பனையாளர்களின் வணிகங்களை ஆன்லைனில் கொண்டு சென்ற மத்திய அரசு விற்பனையாளர்களுக்கு ரூ.10,000 வரை மூலதனக் கடன் வழங்கப்பட்டு வருவதாகக் கூறுகின்றது. இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்று நிலையில், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. பொதுவாக மக்களின் பொருளாதார…

மேலும்...

என் பதவியை யாராலும் பறிக்க முடியாது – அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திட்டவட்டம்!

சென்னை (06 அக் 2020): அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் பதவியை பறிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனை மதுசூதனன் மறுத்துள்ளார். சசிகலா விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில் அதிமுகவில் சலசலப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன், “அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக நான்தான் நீடிப்பேன்; இதில் எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவியை என்னிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாது. அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவியில் இருந்து நான் மாற்றப்படுவதாக வெளியான தகவல் தவறு. மதுசூதனன்…

மேலும்...

சசிகலாவுக்கு எடப்பாடி ரகசிய தூது – ஓரங்கட்டப்படும் ஓபிஎஸ்!

சென்னை (06 அக் 2020): சசிகலாவின் விசுவாசமிக்க தொண்டரான எடப்பாடி சசிகலாவின் தலைமையில் அதிமுகவை இயக்க தயாராகி வருவதாகவும், அதற்காக ரகசிய தூதும் விடப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரை யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அதிமுகவிற்கு…

மேலும்...

அம்மாவின் அரசியல் வாரிசு -அனல் பறக்கும் தேனி!

தேனி (05 அக் 2020): நாளை மறுநாள் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேனியில் நாளைய முதல்வர் ஓபிஎஸ் என 100 அடி நீளத்திற்கு பிளக்ஸ் அமைத்து அம்மாவின் வாரிசு என கோஷமிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் சட்ட சபை தேர்தலையொட்டி அரசியல் வியூகங்கள் நகர தொடக்கி விட்டன. களத்தில் அதிமுகவா? திமுகவா? என்ற போட்டியை விட, அதிமுகவில் ஓபிஎஸ்ஸா? ஈபிஎஸ்ஸா? என்ற குழப்பங்கள் தொண்டர்களுக்கிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் 7ஆம் தேதி…

மேலும்...

அதிமுக முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் இல்லையாம் – அப்படின்னா யார்?

சென்னை (03 அக் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளராக சசிகலாவை அறிவிக்க அதிமுக தயாராகிவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் சசிகலா தலைமையை அதிமுக ஏற்க தயாராகிவிட்டதாகவும் தெரிகிறது. சசிகலா தலைமையை அதிமுக மூத்த தலைவர்கள் ஏற்க தயாராகி விட்டதாகவும், வருகிற 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளருக்கான அறிவிப்பு அதிமுகவில் எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட குழப்பங்களுக்கு அடுத்து, அக்கட்சியின் நிரந்த பொதுச் செயலாளரானார் ஜெயலலிதா. அதேபோல், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா…

மேலும்...

உனக்கு 16 எனக்கு 11 – விளைவு தற்கொலை!

சிவகங்கை (02 அக் 2020): சிறுவயது காதல் பிரச்சனை தற்கொலையில் முடிந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிவபுரிப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான சிறுமி ஒருவர் அப்பகுதியில் அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, விரைந்த வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதுகுறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது….

மேலும்...

தடுமாறிய திருமாவளவன் தன்னிலை விளக்கம்!

சென்னை (02 அக் 2020): இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தது குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தற்போது தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார்,. இதற்கு இரங்கல் தெரிவித்த திருமாவளவன் அவரது பதிவில், “இந்து முன்னணி தலைவர் பெரியவர் இராம.கோபாலன் அவர்களின் மறைவுக்காக வருந்துகிறோம். இந்துக்களின் நலன்களுக்காகக் குரல் கொடுத்தவர். கருத்து முரண் இருந்தாலும் எம்மீது வெறுப்பைக் காட்டாதவர். அரசியல் கணக்குகளுக்காக அவதூறுகளைப்…

மேலும்...

ஓபிஎஸ் தனது இல்லத்தில் தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

சென்னை (02 அக் 2020): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனது வீட்டில் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை வரும் 7-ந்தேதி அறிவிக்கப்பட இருப்பதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால், என்ன முடிவை அவர் அறிவிக்கப்போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ந்தேதி சென்னைக்கு வர…

மேலும்...