மத்திய அரசின் உத்தரவுக்கு தமீமுன் அன்சாரி ஆதரவு!

சென்னை (03 செப் 2020): பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளை மத்திய அரசு தடை செய்திருப்பதற்கு நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நமது நாட்டின் வளரும் தலைமுறையினரின் எதிர்கால நலன் கருதி பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என கடந்த 01.07.2020 அன்று மஜக சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். நேற்று அவற்றை மத்திய் அரசு தடை…

மேலும்...
PUB G

PUBG-க்கு தடை போட்டது நடுவண் அரசு..!

தில்லி (02செப். 2020):சில மாதங்களுக்கு முன்பாக லடாக் எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்திய, சீன வீரர்களுக்கு இடையேயான மோதலுக்குப் பிறகு, சீன நிறுவனங்களின் டிக்டாக், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் உள்ளிட்ட 59 செயலிகளைத் தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. சீனாவுக்கான பொருளாதார ரீதியிலான பதிலடியாக இதனைக் கூறிவரும் மத்திய அரசு தற்போது, மேலும் 118 செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில், லுடோ வேர்ல்ட், வீசாட், பப்ஜி உள்ளிட்ட செயலிகளும் அடங்கியுள்ளன. இந்தியாவில்…

மேலும்...

அதெல்லாம் ஒப்புக்க மாட்டாங்க – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

சென்னை (01 செப் 2020): நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசே காரணம் என்பதை ஒருபோதும் மத்திய அரசு ஒப்புக்கொள்ளாது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 24 சதவீதம் சரிந்திருப்பது அவமானம் எனவும், மத்திய அரசு தனது தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது எனவும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திரு.ப.சிதம்பரம் சாடியுள்ளார். இந்திய பொருளாதார மொத்த உற்பத்தி வளர்ச்சி, இதுபோன்ற ஆழமான பாதாளத்துக்கு செல்லும் என்பதை…

மேலும்...

எப்படி இருக்கிறார் S.P.B.? – மருத்துவமனை அறிக்கை!

சென்னை (01 செப் 2020): பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி.பியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எஸ்.பி.பி-யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து எஸ்.பி.பி குறித்து பல வதந்திகள் வெளியாகின. இதனால் அவ்வப்போது அவரது மகன் வீடியோவின் மூலம் மக்களுக்கு எஸ்.பி.பி உடல்நிலை குறித்து…

மேலும்...

ராமகோபாலனும், இல கணேசனும் விரைவில் நலம்பெற வேண்டும் – கி.வீரமணி!

சென்னை (31 ஆக 2020): உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் ராம கோபாலனும், இல கணேசனும் விரைவில் நலபெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தி.க.தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டு பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நண்பர் இல.கணேசன் அவர்கள், கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் உள்ளார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைகிறோம். அவர் விரைவில் நலமடைந்து மீண்டும் பொதுப் பணியைத் தொடரவேண்டும் என்ற நம்…

மேலும்...

அதை அவர்தான் சொல்லணும் – புள்ளி வைக்கும் பிரேமலதா!

ராமநாதபுரம் (31 ஆக 2020): சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பிரேமலதா வந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடந்த கால தேர்தல்களை போல் அல்லாமல் இந்தமுறை தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு பற்றி விரைந்து அறிவிப்போம் எனத் தெரிவித்தார். மேலும் தற்போதைய நிலவரப்படி தேமுதிக தனி போட்டியிட வேண்டும் என்பது தான் தொண்டர்கள்…

மேலும்...

தனியார் பேருந்து உரிமையாளர்கள் திடீர் முடிவு!

சென்னை (31 ஆக 2020): தனியார் பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதில் மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, சென்னையில் பெருநகர பஸ் போக்குவரத்து சேவை நாளை முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது…

மேலும்...

வழிபாட்டுத்தலங்களில் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (31 ஆக 2020): கொரோனா பரவலை தடுக்க, வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்பின்வருமாறு:- -தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது. -முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும். -65வயதுக்கு மேற்பட்டோர், 10வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். – நுழைவாயிலில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும்...

பாஜக தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று!

சென்னை (31 ஆக 2020): பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று இந்தியாவில் பெருமளவில் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்...

ஈடு செய்ய முடியாத இழப்பு – சிம்பு இரங்கல்!

சென்னை (30 ஆக 2020): எம்பி. வசந்தகுமார் காலமானதற்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று இரவு நடிகர் சிம்பு மறைந்த எம்.பி. வசந்தகுமார் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,“உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவது என்பதை எப்படியாவது இவரிடமிருந்து படித்துக்கொள்ள வேண்டும் தன்னம்பிக்கையற்ற ஒவ்வொருவரும். விளம்பரங்களில் பிராண்டின் முதலாளியே நடிக்கலாம் எனத் தொடங்கி வைத்தவர். கன்னியாகுமரி மக்களின் முன்னேற்றத்தைக் கனவு கண்டவர். அதற்காக உழைத்தவர். குடும்பத்தின் மீது செலுத்தும் தீவிர அன்பை வலிமையாக்கிக்…

மேலும்...