விவசாயிகள் மீதான கொடூர தாக்குதலில் 110 பேர் படுகொலை!

நைஜீரியா (30 நவ 2020): நைஜீரியாவில் விவசாயிகள் மீதான கொடூர தாக்குதலில் 110 பேர் கொல்லப்பட் டுள்ளனர். நைஜீரியாவில் வயலில் அறுவடை செய்யும் விவசாயிகள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதமேந்திய குழு ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் 110 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. நைஜீரிய ஜனாதிபதி முகமது புஹாரி இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். ஆனால் விவசாயிகள் மீதான வெகுஜன தாக்குதல்கள் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பேராபத்து என்பதாக…

மேலும்...

கொரொனா தடுப்பூசி குறித்து ஆக்ஸ்போர்டு புதிய அறிவிப்பு!

லண்டன் (27 நவ 2020): அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிட் தடுப்பூசி புதிய வழியில் சோதிக்கப்படும் என்று ஆக்ஸ்போர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பல்வேறு நாடுகளின் மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் ஆக்ஸ்போர்டு நிறுவனமமும் ஒன்று. இந்நிறுவனம் கொரோனா தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டபோது சோதனைகளில் ஒன்று எதிர் முடிவைக் காட்டிய பின்னர் செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசியின் சோதனை நிறுத்தப்பட்டது. பரிசோதனையாளர்களில் ஒருவர் எதிர் முடிவைக் காட்டியபோது சோதனை நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து…

மேலும்...

ஹிஜாப் அணிவதையே விரும்புகிறேன் – மாடல் உலகிலிருந்து விலகுவதாக பிரபல மாடல் திடீர் அறிவிப்பு!

நியூயார்க் (27 நவ 2020): இஸ்லாமிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றும் விதமாக மாடல் உலகிலிருந்து விலகுவதாக பிரபல அமெரிக்க மாடல் ஹலீமா ஏடன் அறிவித்துள்ளார். ஃபேஷன் உலகில் கொடி கட்டிப் பறந்தவர் 23 வயதான அமெரிக்க மாடலான ஹலீமா ஏடன். இவர் ஹிஜாப் அணிந்து, கன்யே வெஸ்டின் யீஸி உள்ளிட்ட முக்கிய பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் தற்போது ஹிஜாப் அணிந்து மாடல் உலகில் தொடர்வது நெருக்கடியை ஏற்படுத்துவதாகக் கூறி, மாடல் உலகிலிருந்து விலகுவதாக அவர்…

மேலும்...

டிசம்பர் 20 ஆம் தேதி வரை ஊரடங்கு

ஜெர்மனி (26 நவ 2020): ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனாவால் 9.83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கை பற்றி தனது அமைச்சர்களுடன் அந்நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கல் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்பொழுது, ஜெர்மனியில் நவம்பர் இறுதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது. அதனால், வரும் டிசம்பர் 20ந்தேதி…

மேலும்...

94.5 சதவீதம் திறன் கொண்ட கொரோனா தடுப்பூசிகண்டுபிடிப்பு!

நியூயார்க் (16 நவ 2020): அமெரிக்காவின் மார்டனா மருந்து நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என தெரிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் அமெரிக்காவின் மார்டனா இங்க் மருந்து நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம்…

மேலும்...

வாம்கோ புயல் புயலுக்கு 67 பேர் பலி!

மணிலா (15 நவ 2020): பிலிப்பைன்ஸை தாக்கிய வாம்கோ புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் பிலிப்பைன்சில் இயற்கையின் ருத்ர தாண்டவமும் தொடருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2 மாதங்களாக பிலிப்பைன்சை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த புயல்கள் தாக்குகின்றன. இந்த மாத தொடக்கத்தில் கோனி என்ற சக்தி வாய்ந்த புயல் பிலிப்பைன்சின் கிழக்கு பிராந்தியங்களை கடுமையாக உலுக்கியது. இது இந்த ஆண்டு உலகின் மிகவும்…

மேலும்...

அமெரிக்க தேர்தல் முடிவுகள் – ட்ரம்ப் மிரட்டல்!

வாஷிங்டன் (04 நவ 2020): அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து உச்ச நீதிமன்றம் செல்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 238 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 213 கைப்பற்றியுள்ளார். டெக்சாஸ், வட கரோலினா, ஓஹியோ மற்றும் பென்சில்வேனியா மாநிலங்கள் தேர்தல் முடிவுகளின் மாற்றும் வகையை கொண்டுள்ளன, டொனால்டு டிரம்ப் அவை அனைத்தையும் வெல்ல வேண்டும்,…

மேலும்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை!

 அமெரிக்க  ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபர் இருக்கையில் அமர முடியும். தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 209 வாக்குகளும், டிரம்ப் 118…

மேலும்...

பிரான்ஸ் வான்வழி தாக்குதலில் 50 பேர் பலி!

பாரிஸ் (03 நவ 2020): பிரான்ஸ் வான்வழி தாக்குதலில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் அரசுபடைகள் போராடி வரும் புர்கினா பாசோ மற்றும் நைஜரின் எல்லைகளுக்கு அருகிலுள்ள பகுதியில் ஒரு வான்வழி தாக்குதல் வெள்ளிக்கிழமை நடந்தது என்று பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தெரிவித்தார். “அக்டோபர் 30 அன்று மாலியில், பார்கேன் படை 50 க்கும் மேற்பட்ட ஜிஹாதிகளை கொன்றது மற்றும் ஆயுதங்களையும் பொருட்களையும் பறிமுதல் செய்தது” என்று பிரெஞ்சு…

மேலும்...

பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த கத்தி குத்தில் 3 பேர் பலி!

பாரிஸ் (29 அக் 2020): பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்திற்குள் இன்று மதியம் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளான். இந்த கொடூர கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். மேலும், இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...