உலக கால்பந்தாட்டத்தின் ஆல் டைம் மன்னன் பீலே காலமானார்!

பிரேசில் (30 டிச 2022): உலக கால்பந்தாட்டத்தின் ஆல் டைம் மன்னன் சாவ் பாலோ- பீலே காலமானார். அவருக்கு வயது 82. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பிரேசில் தலைநகர் சாவோ பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்தார். அப்போது .பீலேவின் மகன் எடின்ஹோ, மகள்கள் ஃபிளாவியா அரான்ட்ஸ் மற்றும் கெல்லி நாசிமென்டோ ஆகியோர் மருத்துவமனையில் இருந்தனர். முன்னதாக அவருக்கு மோசமான உடல்நிலையைத் தொடர்ந்து எதுவும் நடக்கலாம் என்று மருத்துவர்கள்…

மேலும்...

குவைத்தில் புத்தாண்டில் பாரம்பரியத்துக்கு பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை!

குவைத் (29 டிச 2022): புத்தாண்டை முன்னிட்டு குவைத்தில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துக்குப் பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை பிடிக்க சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய மையங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள். தெருக்கள், சந்தைகள் போன்றவற்றில் மக்களைக் கண்காணிக்க சீருடை மற்றும் மஃப்டியில் 8,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள சிறப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,…

மேலும்...

இந்திய மருந்துகளை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு – உஸ்பெகிஸ்தான் அதிர்ச்சித் தகவல்!

உஸ்பெகிஸ்தான் (28 டிச 2022): இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகளை குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காம்பியாவில் குழந்தைகள் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு உஸ்பெகிஸ்தானில் இருந்து இதே போன்ற அறிக்கை வந்துள்ளது. நொய்டாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் சிரப்பைக் குடித்த 21 குழந்தைகளில் 18 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

மேலும்...

புனித மக்காவில் திடீர் மழை வெள்ளம் – அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் – VIDEO

மக்கா (24 டிச 2022): சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரை வெள்ளிக்கிழமை திடீர் வெள்ளம் தாக்கியது, கார்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டன. எனினும் சேதங்கள் குறித்து தகவல் இல்லை. பல முக்கிய சாலைகள் மூடப்பட்ட நிலையில் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. எதிர்பாராத இடியுடன் கூடிய மழை மற்றும் வெள்ளத்தால் மக்காவிற்கு வந்துள்ள உம்ரா யாத்திரிகர்கள் திகைத்து நின்றனர். எதிர்பாராத சூழ்நிலையைச் சமாளிக்க 200க்கும் மேற்பட்ட…

மேலும்...

போர்களத்துக்கிடையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எப்படி உக்ரைனில் இருந்து வாஷிங்டனுக்கு வந்தார்?

வாஷிங்டன் (23 டிச 2022): உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி டிசம்பர் 21-ம் தேதி அமெரிக்கா சென்றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனை சந்திப்பதே இதன் நோக்கமாகும். ஆனால் ரஷ்ய அச்சுறுத்தல் உள்ள உக்ரேனிய விமானப் பாதை வழியாக ஜெலென்ஸ்கி எப்படி அமெரிக்காவிற்கு வந்தார்? பல மாதங்களாக, ஜெலென்ஸ்கியின் இந்தப் பயணம் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அது கைகூடாமல் இருந்தது. எனினும் டிசம்பர் 11-ம் தேதி அதிகாரப்பூர்வ அழைப்பு கிடைத்தவுடன், பயணத்திற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன. ஜெலென்ஸ்கி உக்ரைனில் இருந்து…

மேலும்...

உலகை உலுக்கிய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் சிறையிலிருந்து விடுதலை!

காத்மன்டு (23 டிச 2022): கொலை, கொள்ளை என உலகை உலுக்கிய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ், இந்தியாவில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட பின், நேபாளத்தில் உள்ள கொலை வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்க சுற்றுலாப் பயணி கோனி ஜோ ப்ரோன்சிச்சை கொலை செய்த வழக்கில் நேபாள நீதிமன்றம் 1975-ல் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. 10 ஆண்டுக்குப் பிறகு ப்ரோன்சிச்சின் கனடா நண்பரை கொன்ற வழக்கிலும் சோப்ராஜ் மீதான குற்றம்…

மேலும்...

சீனாவை அச்சுறுத்தும் கோவிட் மரணங்கள்!

பெய்ஜிங்(21 டிச 2022): மீண்டும் கோவிட் 19 இறப்புகள் சீனாவை பயமுறுத்துகின்றன. 142 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் சீனாவில் கோவிட் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,242 ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் 3 முதல் நாட்டில் தேசிய சுகாதார ஆணையம் (NHC) தெரிவித்த கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கை இவை. கோவிட் காரணமாக இறப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை அரசாங்கம் வெளியிடுகிறதா என்கிற சந்தேகமும் சீனாவின் மீது உள்ளது. டிசம்பர் 19 அன்று சீனாவில் 2,722 புதிய கோவிட்…

மேலும்...

மருந்து தரத்தை மீறியதால் கருப்புப் பட்டியலில் பாபா ராம்தேவின் பதாஞ்சலி தயாரிப்பு நிறுவனம்!

காத்மண்டு (21 டிச 2022): உலக சுகாதார அமைப்பின் மருந்து உற்பத்தித் தரத்தை மீறியதாகக் கூறி பாப ராம்தேவின் பதாஞ்சலி உட்பட 6 இந்திய மருந்து நிறுவனங்களை நேபாளம் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இத்தகவலை நேபாள அரசு டிசம்பர் 18ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு மூலம் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை சப்ளை செய்யும் நேபாளத்தில் உள்ள உள்ளூர் முகவர்களை உடனடியாக ஆர்டர்களை திரும்பப் பெறுமாறு நேபாள அரசு கேட்டுக் கொண்டுள்ளது….

மேலும்...

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

கலிபோர்னியா (20 டிச 2022): அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிகாலை 2.34 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுமார் 3.30 மணியளவில் பல்வேறு இடங்களில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக செய்திகள் வரத் தொடங்கின. Earthquake Strikes Northern California

மேலும்...

சவூதியில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரியாத் (20 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை மழை தொடர வாய்ப்புள்ளது. சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் பருவநிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழையுடன் இடியுடன் கூடிய மழை, புழுதி காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மக்கா, அல்பாஹா, அல்…

மேலும்...