புஷ்பாவுக்கு 6 நிமிடத்திற்கு 6 கோடி ரூபாயா?

ஐதராபாத் (11 மே 2020): புஷ்பா திரைப்படத்தில் 6 நிமிட காட்சிக்காக 6 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் அடுத்து மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் புஷ்பா. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடா என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படம் ஆந்திராவில் செம்மர கடத்தல் சம்மந்தப்பட்ட கதை என கூறப்படுகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால் அந்த அப்படத்தில் இருந்து அவர் வெளியேறப்போவதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளவருகின்றன. அது மட்டுமின்றி மெயின் வில்லன் ரோலுக்கு தர்பார் பட வில்லன் சுனில் ஷெட்டியை நடிக்கவைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என கூறப்படுகிறது.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக முழு சினிமா துறையும் முடங்கி இருக்கிறது. நிலைமை சீரானதும் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்ட சேஸ் காட்சியை படமாக்க உள்ளனர். அது படத்தில் 6 நிமிடங்களுக்கு வரும்.

லாக்டவுனால் சினிமா துறையினர் வேலை இழந்துள்ள நிலையில் இந்த காட்சிகளை முழுவதுமாக இந்தியாவிலேயே எடுக்கவுள்ளனர். பீட்டர் ஹேயின் இந்த சண்டை காட்சிகளை வடிவமைக்க உள்ளார்.

ஹாட் நியூஸ்: