நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பால் மரணம்!

பெங்களூரு (09 ஜூன் 2020): பிரபல கன்னட இளம் நடிகர் சிரஞ்சீவி சஜ்ரா மாரடைப்பால் உயிரிழந்தர்.

நடிகர் சிரஞ்சீவி (39) இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்து நிலையில் , திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் பெங்களூரில் நேற்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிரஞ்சீவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு அஞ்சலி இரங்கல் தெரிவித்துள்ளனர்.. நேற்று மாலை இவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் இவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...