நடிகர் ராதாரவிக்கு கொரோனா? – குடும்பத்தர் தனிமைப்படுத்தல்!

சென்னை (15 மே 2020): நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான ராதாரவி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தற்போது கொரோனாவால் இந்தியா முழுக்க ஊரடங்கு நிலவி வருகிறது. மக்கள் யாரும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்ய முடியாத நிலையுள்ளது. மிக முக்கிய காரணங்களுக்காக மட்டும் உரிய அனுமதி தரப்படுகிறது.

இந்நிலையில் ராதா ரவி கடந்த 10 ம் தேதி சென்னையில் இருந்து நீலகிரி கோத்தகிரிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அவர் மார்வளா சாலையும் இள்ள சொகுசு பங்களாவில் தங்கியிருந்த. விசயம் அறிந்த சுகாதாரத்துறையினர் அவரின் பங்களாவுக்கு சென்று, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் அவரின் வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதோடு உடன் இருந்த குடும்பதாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாட் நியூஸ்: